கம்பராமாயணம் 6648 · யுத்த 6.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெஞ்சிலை வாங்கி - இலக்குவன் கொடுத்த கொடியவில்லை கைகளில் வாங்க; வாளி யெய்புட்டிலும் - அம்புகள் பெய்துள்ள அம்பறாத் தூணியையும்; மலைபோல் வீங்கு தோள்வலம் வீக்கினன் - மலை போன்ற பெரிய தோளின் வலது பக்கம் கட்டினான்; கோதையை விரலால் தாங்கி - விரல்களுக்கிடும் உறையையும் விரல்களில் அணிந்து; நாணினைத் தாக்கினன் - வில்லின் நாணை இழுத்துப் பிடித்தான்; தாக்கிய தமரம் - அவ்வாறு தாக்கியதால் உண்டான நாண் ஒலி; ஓங்குமுக்கணான் தேவியை - பெருமையில் ஓங்கிய முக்கண் மூர்த்தியான சிவபிரானது தேவியான உமாதேவியை; ஊடல் தீர்த்துளது - சிவபிரானுடன் கொண்ட ஊடலைத் தீர்த்தது.
பகைவரை அழித்தொழிக்கவல்ல கொடுமையுள்ள வில்லை 'வெஞ்சிலை' என்றார். அம்பறாத் தூணியை 'வாளிபெய் புட்டில்' என்றார் கோதை - உடும்புத் தோல். உடும்புத் தோலாலான விரல்களுக்கிடும் உறை இங்கு 'கோதை' எனப்பட்டது தமரம் - ஓசை. வில்லின் நாணைத் தாக்கியதால் எழுந்த ஓசை. சிவபிரானுடன் ஊடல் கொண்டு விலகியிருந்த உமாதேவி நாண் ஒலி கேட்ட அச்சத்தால் சிவபெருமானைத் தழுவிக் கொண்டாள் எனவே ஊடல் தீர்ந்தது என்பதால் 'தாக்கிய தமரம் முக்கணான் தேவியை ஊடல் தீர்த்துளது' என்றார். பௌராணிகம் இலக்கியக் கற்பனைக்குக் களனாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He took the fierce bow, and bound the quiver that holds the arrows
- on the right of his mountain-like swelling shoulder; fitting the finger-guard on his finger,
- he struck the bowstring; the twang of that stroke
- ended the lovers' quarrel of the consort of the exalted Three-Eyed One.
What the poem says
Rāmaṉ takes the bow, straps the quiver to his shoulder, puts on his leather finger-guard (kōtai, made of monitor-lizard skin), and strikes the string. The twang is so terrifying that it reaches Kailāsam: Umai, who had been sulking at Civaṉ after a lovers' quarrel, is frightened into his arms, and so the quarrel ends. As the commentary says, Purāṇic lore here becomes the ground for a poet's fancy.