கம்பராமாயணம் 6649 · யுத்த 6.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாரியின் பெருந்துளியினும் வரம்பில - மழையின் பெரியதுளிகளை விட அளவற்றவையும்; வடித்த சீரிது என்றவை எவற்றினும் சீரிய - கூர்மையானவையும் சிறந்தவை எனக் கூறப்படும் எல்லாவற்றையும் விடச் சிறந்தவையும் ஆகிய அம்புகளை; தெரிந்து - தேர்ந்து எடுத்து; பார்இயங்கு இரும்புனல் எலாம் - நிலத்தில் பரந்துள்ள நீரெல்லாவற்றையும், முடிவினில் பருகும் சூரியன் கதிர் அனையன - ஊழிக் காலத்தின் இறுதியில் பருகுகின்ற சூரிய கிரணங்களைப் போன்றவையும் ஆகிய; சுடு சரம் துரந்தான் - வெப்பம் மிக்க அம்புகளைக் கடல் மீது எய்தான்.
இராமன் எய்த அம்புகளின் மிகுதியை உணர்த்த 'மாரியின் பெருந்துளியினும் வரம்பில' என்றார். வடித்த - நன்கு கூராக்கப்பட்ட சிறந்தவை என்று சொல்லப்படும் ஆயுதங்கள் எவற்றிலும் சிறந்தவை என்பதைச் 'சீரிதென்றவை எவற்றினும் சீரிய' என்றார். நிலமெங்கும் பரந்து நிறைந்திருக்கும் ஆற்று நீர் கடல் நீர் மற்றுமுள்ள எல்லா வகை நீரையும் 'பார் இயங்கு இரும்புனல் எலாம்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- More countless than the great drops of the rain, sharpened,
- choosing those finer than all that are called fine,
- like the rays of the sun that at the end drink up all the great waters spread over the earth,
- he loosed burning arrows.
What the poem says
Rāmaṉ fires a storm of arrows at the sea, more than the drops of a downpour, each the finest and sharpest of weapons. They burn like the rays of the sun at the end of an age, which drink up every river, sea and pool on earth.