கம்பராமாயணம் 6650 · யுத்த 6.18

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெரிய மால் வரை ஏழினும் - பெரிய, கரிய மலைகளான ஏழையும் விட; பெரு வலி பெற்ற - மிகுந்த வலிமையை உடைய; வரி கொள் வெஞ்சிலை - கட்டமைந்த கொடிய வில்லை; வளர் பிறையாம் என வாங்கி - வளர்பிறைச் சந்திரன் எனக் கூறுமாறு நாணால் வளைத்து, திரிவ நிற்பன யாவையும் - சரம், அசரம் ஆகிய எல்லாவற்றையும்; முடிவினில் தீக்கும் - யுகமுடிவிலே தீய்த்து அழிக்கின்ற, எரியின் மும்மடி கொடியன - நெருப்பை விட மூன்று மடங்கு கொடியனவான; சுடு சரம் எய்தான் - சுடு சரங்களை இராமபிரான் கடலின் மீது எய்தான்.

மால்வரை ஏழு - ஏழு பெரிய மலைகள் கைலை, இமயம், மந்தரம் விந்தம் நிடதம் ஏமகூடம், நீலகிரி என்பனவாம் "இச்சிலை கெடக்க மலை ஏழையும் இறானோ" என முன்பு (1152) கூறியது காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bending like a waxing crescent the banded, fierce bow
  2. that has greater strength than the seven great mountains,
  3. he shot burning arrows three times fiercer than the fire
  4. that at the end scorches everything that moves and everything that stands.

What the poem says

Rāmaṉ draws his bow, mightier than the seven great mountains, into the curve of a crescent moon and shoots arrows three times fiercer than the fire that consumes all moving and unmoving things at the end of an age. The seven mountains are listed as Kailāsam, Imayam, Mantaram, Vintam, Niṭatam, Ēmakūṭam and Nīlakiri.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1periya māl varai ēḻiṉum peru vali peṟṟa
vari koḷ veñ cilai vaḷar piṟaiyām eṉa vāṅki,
tiriva niṟpaṉa yāvaiyum muṭiviṉil tīkkum
eriyiṉ mum maṭi koṭiyaṉa cuṭu caram eytāṉ.