கம்பராமாயணம் 6651 · யுத்த 6.19

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மீனும் நாகமும் விண்தொடு மலைகளும் விறகா
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த,
பேன நீர் நெடு நெய் என, பெய்கணை நெருப்பாக்
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது, கடற் குட்டம்.

பொருள் · Meaning in Tamil

மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா - கடலில் உள்ள மீன்களும், நாகங்களும் விண்ணைத் தொடும் மலைகளும் விறகாகவும்; ஏனை நிற்பன யாவையும் - மற்றும் அங்கு நிற்கும் மரங்களும்; மேல் எரி எய்த - கடல்மீது நெருப்புப்பற்றி எரிதலால்; பேன நீர் நெடு நெய் என - நுரையோடு கூடிய கடல் நீர் எல்லாம் நெய்யாகவும்; பெய்கணை நெருப்பால் - இராமன் கடல்மீது விட்ட அம்புகளாகிய தீயினால்; கடற்குட்டம் - அக் கடலாகியபள்ளம்; கூனை அங்கியின் குண்டம் ஒத்தது - வளைந்த நெருப்பெரியும் யாக குண்டத்தை ஒத்திருந்தது.

கடற்குட்டம் அங்கியின் குண்டம் ஒத்தது என்பது கருத்து. பேனம் - நுரை கூனை - வளைவு. குட்டம் - பள்ளம் (குட்டை) கடலை இழித்துக் குட்டம் என்றார். உருவகத்தை உறுப்பாகக் கொண்ட தற்குறிப்பேற்ற அணி; உருவகம் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the fish, the serpents and the sky-touching mountains as firewood,
  2. and everything else standing there catching the fire above,
  3. and the foaming water as abundant ghee, by the fire of the arrows he poured in,
  4. the hollow of the sea became like a rounded sacrificial fire-pit.

What the poem says

The burning sea is pictured as a great sacrificial fire. The fish, sea-serpents and towering undersea mountains are the firewood, the foaming water is the ghee poured into it, and Rāmaṉ's flaming arrows are the fire, so that the whole basin of the ocean looks like a curved fire-pit for a Vedic rite. The poet belittles the vast ocean by calling it a mere 'hollow'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṉum nākamum viṇ toṭum malaikaḷum viṟakā
ēṉai niṟpaṉa yāvaiyum mēl eri eyta,
pēṉa nīr neṭu ney eṉa, pey kaṇai neruppāl
kūṉai aṅkiyiṉ kuṇṭam ottatu, kaṭaṟ kuṭṭam.