கம்பராமாயணம் 6652 · யுத்த 6.20

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பாழிவல் நெடுங் கொடுஞ்சிலை - இராமபிரானுடைய பெரிய, வலிய நெடிய, கொடிய வில்; வழங்கிய பகழி - வழங்கிய அம்புகள்; ஏழு வேலையும் எரியொடு புகைமடுத்து ஏகி - ஏழு கடல்களிலும் நெருப்புடன் புகையை நிறைத்துக் கொண்டு சென்று; ஊழிவெங்கனல் கொழுந்துகள் - ஊழிக்காலத்தில் தோன்றும் வெம்மையான தீயினது கொழுந்துகளைப் போல; உருத்து எழுந்து ஓடி - சினந்து எழுந்து ஓடி; ஆழிமால் வரைக்கு அப்புறத்து - சக்கரவாள கிரிக்கும் அப்புறத்துள்ள; இருளையும் அவித்த - இருட்டையும் அணைத்தன (நீக்கின.

பாழி - பெரிய அம்புகள். ஏழு கடல்களையும் நெருப்பாலும் புகையாலும் நிரப்பிக் கொண்டு சென்றனவாதலின் 'எரியொடு புகை மடுத்தேகி' என்றார் யுகாந்த காலத்துப் பெரு நெருப்பின் கொழுந்துகள் போல, அம்புகள் சினந்து சீறி எழுந்து ஓடின என்றார். உருத்து - சினந்து ஆழிமால்வரை - சக்கரவாள கிரி. ஏழு கடல்களுக்கு அப்பால் சக்கரவாள கிரியும், அக்கிரிக்கு அப்பால் இருள் சூழ்ந்த இடமும் உள்ளன என்பது புராணக் கொள்கை. அத்தொலைவிலுள்ள இருளையும் இராமபிரானது அம்புகள் நீக்கின என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The arrows that the great, strong, long and cruel bow released
  2. went on, filling all seven seas with fire and smoke,
  3. and, rising in fury like the flames of the scorching fire of the world's end, they ran
  4. and put out even the darkness beyond the great mountain that rings the world.

What the poem says

The arrows fill all seven seas with fire and smoke and race on like the flames of the end of the world. According to the Purāṇas, beyond the seven seas lies Cakkaravāḷam, the mountain range that encircles the world, and beyond that is a region of endless darkness. Rāmaṉ's burning arrows reach even there and light up that darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāḻi val neṭuṅ koṭuñ cilai vaḻaṅkiya pakaḻi,
ēḻu vēlaiyum eriyoṭu pukai maṭuttu ēki,
ūḻi veṅ kaṉal koḻuntukaḷ uruttu eḻuntu ōṭi,
āḻi māl varaikku ap puṟattu iruḷaiyum avitta.