கம்பராமாயணம் 6653 · யுத்த 6.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மருமதாரையின் எரியுண்ட மகரங்கள் - அம்பு தைத்தலால் உயிர் நிலையில் எரியுண்ட மகரமீன்கள்; மயங்கச் செரும - மயக்கமுற்று நெருங்கவும்; வானிடைக் கற்பக மரங்களும் தீய - விண்ணுலகத்திலுள்ள கற்பக மரங்களும் தீய்ந்து போகவும்; நிருமியாவிட்ட நெடுங்கணை பாய்தலின் - இராமபிரான் சங்கற்பித்து விட்ட நெடிய அம்புகள் பாய்தலால்; நெருப்போடு உருமு வீழ்ந்தென - நெருப்புடன் இடியும் சேர்ந்து விழுந்தது போல்; கடல் துளி உம்பர் சென்றன - கடல்நீர் விண்ணுக்குச் சென்றது.
மருமதாரை - உயிர் நிலை பெற்ற இடம் (மர்மஸ்தானம்) மகரம் - சுறாமீன். செரும - நெருங்க. நிருமியா விட்ட - தொகுத்து விட்ட சங்கற்பித்துவிட்ட என்பதுமாம். மருமதாரை மறைந்து வாழும் இடமுமாம். கடலின் அடிப்பகுதியில் மறைந்து வாழும் சுறாமீன்கள் எரியுண்டு மயங்கி மேற்பரப்பிலே நெருங்கிப் பரந்தன விண்ணுலகத்துக் கற்பக மரங்கள் தீய்ந்து கருகிய இராமபாணம் கடலிலும், விண்ணிலும் சென்றுதாக்கி நிலைகுலையச் செய்தன எனவுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The makaras, burnt in their vital parts, crowded together dazed,
- and the wishing-trees in the sky were scorched,
- as the long arrows he willed and loosed plunged in; like thunder falling with fire,
- the drops of the sea went up to the heavens.
What the poem says
The arrows strike the great makara fish in their vital spots, and they crowd together, stunned. The spray thrown up by the arrows rises to heaven like thunderbolts wrapped in fire, and scorches even the kaṟpakam, the wish-granting trees of the gods' world.
'Marumatārai' may also mean the hidden depths where the sharks live, so the line can be read as the sharks being driven up from the seabed to the surface.