கம்பராமாயணம் 6654 · யுத்த 6.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கூடும் வெம்பொறிக் கொழுங்கனல் - வெப்பமான தீப்பொறிகளோடு கூடிய கொழுந்துவிட்டெரியும் நெருப்பு; தொடர்ந்தெனக் கொளுந்த - தொடர்ந்து பற்றிக் கொளுத்துவதாலே; ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன - வானத்திலே ஓடுகின்ற மேகங்கள் பொரிந்து போய் இடையே உதிர்ந்தன; அளக்கர்கோடு தீந்து எழ - கடல் நீர் கொதித்து கடலெல்லையைக் கடந்து மேலே பரந்து செல்ல; கொழும்புகைப் பிழம்பு மீக்கொள - அதனாலே கொழுவிய புகைத் தொகுதி மேல் சென்று சூழ; உம்பர் ஆடும் மங்கையர் - விண்ணுலகத்திலே நாட்டியமாடும் நடன மங்கையரின்; கருங்குழல் விளர்த்தன - கரிய கூந்தலும் வெளிறிப் போயின.
வெம்பொறிகூடும் என இயைக்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the cruel fire with its gathering hot sparks spread and caught them,
- the running clouds were parched and dropped away midway;
- the dark tresses of the women who dance in heaven turned pale,
- as the shore of the sea burned and rose and a dense mass of smoke spread high.
What the poem says
The fire, thick with sparks, catches the drifting clouds, which are seared and fall apart in the sky. The boiling sea surges over its bounds and a heavy pall of smoke rises up to heaven, where it turns pale the black hair of the celestial dancers, perhaps with ash, perhaps with fear.