கம்பராமாயணம் 6655 · யுத்த 6.23

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிமிர்ந்த செஞ்சரம் - வளைதலில்லாது நிமிர்ந்துள்ள செம்மையான அம்புகள்; நிறந்தொறும் படுதலும் - மார்புகள் தோறும் சென்று படுதலால்; நெய்த்தோர் உமிழ்ந்து உலந்தன - இரத்தம் சிந்தி இறந்தனவான; மகரங்கள் உலப்பில - சுறாமீன்கள் அளவில்லாதனவாம்; உருவத் துமிந்த துண்டமும் - இராமபாணம் ஊடுருவித்துண்டித்த துண்டங்களும்; பலபடத்துரந்தன - பலவாக எங்கும் சிதறலாயின; தொடர்ந்து திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி - தொடர்ந்து அம்புகள் பாய்வதால் திமிங்கிலங்களும், திமிங்கிலகிலங்களும் சிதறி (எங்கும் துண்டுகள் பரந்தன.

செஞ்சரம் - செம்மையான அம்புகள்; தீயை உமிழ்தலால் சிவந்த அம்பு எனினும் அமையும். நெய்த்தோர் - இரத்தம். உலத்தல் - வற்றுதலுமாம். உலப்பில - அளவற்றன. சிதறித் துரந்தன என இயைந்து பொருள் படும். திமிங்கிலம் - மீன்களை விழுங்கும் ஒருவகைப் பெரியமீன். அதையும் தின்னவல்ல மிகப் பெரியமீன் திமிங்கில கிலம் 'ஓசனை உலப்பிலாத உடம்பு அமைந்து உடைய என்னத் தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்கள்' என்று (4777) முன்பும் திமிங்கிலகிலம் குறிக்கப்பட்டது. மிகப் பெரிய பேச்சிலும் நூல்களிலும் பதிவாகியுள்ளன என்பது அந்தப் பாடலின் செய்தி; நேரிலே கண்டவரில்லை என்பது குறிப்புப் போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the straight red arrows struck every breast, countless
  2. makaras spewed blood and died; and the pieces
  3. cut clean through their bodies were flung in many directions, as, scattered one after another,
  4. the whales and the whale-swallowers broke apart.

What the poem says

Rāmaṉ's straight, fiery arrows pierce the chests of countless sea creatures. Sharks bleed and die; the arrows slice through bodies and fling the pieces everywhere. Even the timiṅkilam, a giant fish that swallows other fish, and the still vaster timiṅkilakilam, which swallows the timiṅkilam, are torn apart. The commentary notes that Kampaṉ mentioned these legendary creatures earlier as known from report and books rather than from sight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nimirnta ceñ caram niṟamtoṟum paṭutalum, neyttōr
umiḻntu ulantaṉa makaraṅkaḷ ulappu ila; uruvat
tuminta tuṇṭamum pala paṭat turantaṉa, toṭarntu
timiṅkilaṅkaḷum timiṅkilakilaṅkaḷum citaṟi.