கம்பராமாயணம் 6656 · யுத்த 6.24

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீறு மீச்செல நெருப்பு எழப் பொருப்பு எலாம் எரிய,
நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய,
ஆறு கீழ்ப்பட அளறுபட்டு அழுந்திய அளக்கர்ச்
சேறு தீய்ந்தன; காந்தின சேடன் தன் சிரங்கள்.

பொருள் · Meaning in Tamil

நூறும் ஆயிர கோடியும் கடுங்கணை நுழைய - நூறும், ஆயிரமும் கோடியுமாக விரைந்து பாயும் அம்புகள் கடலில் நுழைவதால்; நீறு மீச்செல நெருப்பெழ - சாம்பல் மேலே செல்லும்படி நெருப்பு மேலோங்கி எழுதலால், பொருப் பெலாம் எரிய - மலைகளெல்லாம் தீப்பற்றி எரிந்தன; ஆறு கீழ்ப்பட - அம்புகள் கீழேயும் நுழைவதால் பாதாளத்துக்கு வழி உண்டாக; அளறுபட்டு அழுந்திய அளக்கர் - கீழே சேறுபட்டு அழுந்தியிருந்த கடல்; சேறு தீய்ந்து எழ - சேறும் தீய்ந்து கருகி மேலே எழுதலால்; காந்தின சேடன்தன் சிரங்கள் - பூமியைச் சுமக்கும் ஆதிசேடனுடைய ஆயிரம் தலைகளும் வெதும்பின.

கடுங்கணை - விரைந்து செல்லும் அம்புகள் ஆயிரம் தலைகளும் வெதும்பின. மீச்செல - மேலே செல்ல. அளறு - சேறு. சேடன் - ஆதிசேடன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With ash rising high and fire springing up, all the mountains burning,
  2. as hundreds and thousands of crores of fierce arrows drove in,
  3. opening a path downward, the sea sunk deep in its mud
  4. had its mire scorched and rising; and the heads of Cēṭaṉ were seared.

What the poem says

Countless arrows plunge into the sea. Ash flies upward, the undersea mountains burn, and the arrows bore right through to the underworld. The mud at the bottom of the ocean is baked and heaved up, and the heat reaches even the thousand heads of Ātucēṭaṉ, the serpent who holds up the earth from below.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṟu mīccela neruppu eḻa, poruppu elām eriya,
nūṟum āyira kōṭiyum kaṭuṅ kaṇai nuḻaiya,
āṟu kīḻp paṭa aḷaṟu paṭṭu aḻuntiya aḷakkar
cēṟu tīyntu eḻa; kāntiṉa cēṭaṉtaṉ ciraṅkaḷ.