கம்பராமாயணம் 6657 · யுத்த 6.25

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மொய்த்த மீன்குலம் முதல் அற முருங்கின, மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என, பொருகணை எரிய;
உய்த்த கூம்புடை நெடுங் கலம் ஓடுவ கடுப்ப,
தய்த்த அம்பொடும் திரிந்தன தால மீன் சாலம்.

பொருள் · Meaning in Tamil

பொருகணை எரிய - இராமபிரானுடைய போர்த் தொழில் வல்ல அம்புகள் கொழுந்து விட்டு எரிவதால்; மொழியின் பொய்த்த சான்றவன் குலம் என - வழக்கில் பொய்ச் சாட்சி கூறியவன் குலத்தோடு அழிந்து படுவது போல; மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்க - நெருங்கிய மீன் கூட்டமெல்லாம் அடியோடு அழியலாயின; தாலமீன் சாலம் - பனைமீன்களின் வரிசையானது; தைத்த அம்பொடு திரிந்தன - உடலில் தைத்த அம்போடு திரிவன; உய்த்த கூம்புடை நெடுங்கலம் - கடலில் செலுத்தப்பட்ட கூம்புகளை உடைய நெடிய மரக்கலங்கள்; ஓடுவ கடுப்ப - ஓடுவதை ஒத்திருந்தன.

மொய்த்த - நெருங்கித் திரண்ட; இராமபிரானது அம்புகள் பட்டு எரிவதால் மீன்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அடியோடு இறந்து அழிந்தன என்பதற்கு வழக்கில் பொய்ச் சாட்சி கூறியவன் குலத்தோடு அழிவதைக் கூறினார். பொய்க்கரி கூறுவதன் தீமையை இங்கு எடுத்தியம்புவது நினைவு கூர்தற்குரியது. சாலம் - வரிசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The swarming tribes of fish were destroyed root and all, like the line
  2. of a witness who has lied in his testimony, as the warring arrows blazed;
  3. like tall ships with masts sailing along,
  4. shoals of palm-fish roamed with the arrows stuck in them.

What the poem says

As the fiery arrows strike, whole shoals of fish are wiped out, like the family of a man who has borne false witness: the old belief was that perjury destroys a man's entire line. Meanwhile the huge 'palm-fish' (tālamīṉ), with arrows standing up in their backs, swim about like tall ships under sail with their masts upright.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1moytta mīṉ kulam mutal aṟa muruṅkiṉa, moḻiyiṉ
poytta cāṉṟavaṉ kulam eṉa, poru kaṇai eriya;
uytta kūmpuṭai neṭuṅ kalam ōṭuva kaṭuppa,
taitta ampoṭum tirintaṉa tālamīṉ cālam.