கம்பராமாயணம் 6658 · யுத்த 6.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிந்தி ஓடிய குருதி வெங்கனலொடு செறிய - அம்பு தைத்தலால் மீன் முதலியவற்றினிடமிருந்து சிந்தி ஓடிய இரத்தம் வெவ்விய நெருப்புடன் செறிவதால்; அந்தி வானகம் கடுத்தது - அந்தி வானத்தை ஒத்திருந்தது; அவ்வளப்பரும் அளக்கர் - அந்த அளவிடமுடியாத கடல், பந்தி பந்திகளாய் - வரிசை வரிசையாக; நெடுங்கணை படர - நீண்ட அம்புகள் பரந்து படர்ந்தமையால்; சிலமீன் வெந்து தீந்தன கரிந்தன பொரிந்தன - மீனினமெல்லாம் வெந்து, தீய்ந்து, கரிந்து பொரிந்து போயின.
கடுத்தது - ஒத்திருந்தது. பந்தி - வரிசை அளக்கர் - கடல். கடல்மீது சிந்தி ஓடிய இரத்தத்தோடு, வெப்பமான நெருப்பும் செறிந்திருப்பதால் அந்தப் பெரிய கடல் முழுவதும் அந்திவானைப் போலக் காணப்பட்டது. பந்தி பந்தியாய் - அடுக்குத் தொடர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the spilt, flowing blood mingling with the fierce fire,
- that immeasurable sea looked like the evening sky;
- as the long arrows spread in row upon row,
- some fish were cooked, some scorched, some charred, some fried.
What the poem says
The sea, red with blood and fire, looks like the sky at sunset. Row after row of arrows sweep across it, and the fish are boiled, scorched, charred and fried. The repeated phrase 'row upon row' (panti pantikaḷāy) and the string of verbs at the end drive home the scale of the destruction.