கம்பராமாயணம் 6659 · யுத்த 6.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வையநாயகன் வடிக்கணை குடித்திட - உலகின் நாயகனாகிய ராமபிரான் எய்த கூர்மையான அம்புகள் கடல் நீரைக் குடித்து விடுவதால்; வற்றி, ஐயநீர் உடைத்தாய் - கடல் தண்ணீர் வற்றிப் போக சிறிதளவு நீரேகடலில் இருக்க; மருங்கு அருங்கனல் மண்ட - பக்கங்களில் எல்லாம் அணைப்பதற்கரிய நெருப்புப் பற்றி எறிய; கைகலந்து எரி கருங்கடல் - எல்லாப் பக்கங்களிலும் நெருப்பு கலந்து எரியும் கருங்கடல்; கார் அகல் கடுப்ப - கரிய சட்டியான வாணலியை ஒத்திருக்க; வெய்ய நெய்யிடை வேவன ஒப்பன சிலமீன் - சிலமீன்கள் காய்ந்த நெய்யிலே வேகின்றதை ஒத்திருந்தன.
கணை குடித்தது போக மிஞ்சியிருந்த சிறிதளவு நீர் 'ஐயநீர்' எனப்பட்டது. மண்டுதல் - எறிதல். கை கலந்து - பக்களில் கலந்து. கார் அகல் - கருப்பு நிறமான வாணலி. கடுப்ப, ஒப்ப - உவமை உருபுகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the sharp arrows of the Lord of the world drank it, it dried up,
- keeping only a little water, with fierce fire crowding in on every side;
- the dark sea, burning with fire mingled all through, was like a black frying pan,
- and some fish were like things frying in hot ghee.
What the poem says
The arrows have drunk up most of the sea, leaving only a thin layer of water, and fire closes in from all sides. The blackened ocean now looks like a dark iron frying pan over a fire, and the fish in what water remains look like food frying in hot ghee.