கம்பராமாயணம் 6661 · யுத்த 6.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எங்கும் வெள்ளிடை மடுத்தலின் - அம்புகள் எங்கும் தண்ணீர் இல்லாது வெற்றிடமாக்கி விட்டதால்; இழுதுடை இனமீன் சங்கமும் - நிணத்தை உடைய மீன்களும் சங்குகளும்; கறி, கிழங்கென இடைஇடை தழுவி - காய்களும், கிழங்குகளும் இடையே கிடந்தது போல் இடையே கலந்து பொருந்தி; அங்கம் வெந்து - தம்முடல் முழுதும் வெந்து போய்; அளற்றிடை அடுக்கிய கிடந்த - சேற்றிலே அடுக்கடுக்காகக் கிடந்தவை; பொங்கும் நல்நெடும் புனலற - பொங்கி எழும் நிறைந்த நீர் முழுதும் வற்றிப் போக; பொரிந்தன போன்ற - பொரிந்து கிடந்தன போன்றிருந்தன.
வெள்ளிடை - வெற்றிடம். இழுது - நிணம் (கொழுப்பு). 'இனமீன் சங்கமும்' என்பது மீனும் சங்கமும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As emptiness spread everywhere, the fatty shoals of fish
- and the conches, mixed here and there like vegetables and tubers,
- lay piled in the great mud with their bodies cooked;
- with the swelling, deep water gone, they looked as if they had been fried.
What the poem says
With the water gone, the seabed is laid bare. Fat fish and conches lie heaped together in the mud, cooked through, like vegetables and roots mixed into a dish. The poet keeps up the kitchen imagery of the previous verse: with the sea dried out, the creatures seem to have been fried.