கம்பராமாயணம் 6662 · யுத்த 6.30

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அதிரும் வெங்கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப,
வெதிரின் நல் நெடுங் கான் என வெந்தன, மீனம்;
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல் திரைகளும் பொருவன, ஒருபால்.

பொருள் · Meaning in Tamil

அதிரும் வெங்கணை - அதிர்ந்து வருகின்ற வெம்மைமிக்க அம்புகள்; ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப - ஒன்றுடன் ஒன்று மோதுவதால் நெருப்பை உமிழ; வெதிரின் வல் நெடுங்கான்என - வலிய, பெரிய மூங்கில்காடு தீப்பற்றி எரிவது போல; மீனினம் வெந்தன - மீன் கூட்டமெல்லாம் தீயில் வெந்தன; பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் - கடலில் வாழுகின்ற பொதுவான உயிரினங்களின் குழுக்களும்; துணிந்தன பொழிந்த - அம்புகளால் துணிக்கப்பட, அதனால் பொழிந்த, உதிரமும் கடல் திரைகளும் - இரத்தமும் கடல் அலைகளும்; ஒரு பால் பொருவன - ஒரு பக்கம் மோதுவன வாயின.

அதிர்தல் - முழங்குதல். அடர்தல் - நெருங்குதல் (மோதுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the roaring, fierce arrows pressed upon one another and threw out fire,
  2. the fish burned like a strong, tall forest of bamboo;
  3. the tribes of living creatures in common were cut to pieces, and the blood they poured out
  4. and the waves of the sea clashed together on one side.

What the poem says

The roaring arrows strike against each other and throw off sparks, and the shoals of fish go up in flames like a dense bamboo forest on fire, which burns with a crackle and roar. All the sea's creatures are cut down, and in one place their blood surges and clashes with the remaining waves of the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1atirum veṅ kaṇai oṉṟai oṉṟu aṭarntu eri uyppa,
vetiriṉ val neṭuṅ kāṉ eṉa ventaṉa, mīṉam;
potuviṉ maṉṉuyirk kulaṅkaḷum tuṇintaṉa poḻinta
utiramum kaṭal tiraikaḷum poruvaṉa, orupāl.