கம்பராமாயணம் 6663 · யுத்த 6.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அண்ணல் வெங்கணை அறுத்திட - இராமபிரான் எய்த கொடிய அம்புகள் அறுப்பதாலே; தெறித்து எழுந்து அளக்கர்ப் பண்ணைவெம்புனல் - மேலே தெறித்து எழுந்த கடலாகிய நீர் நிலையின் கொதிக்கும் நீர்; மண்ணின் வேர் உறப் பற்றிய நெடுமரம் - மண்ணிலே வேரூன்றி வளர்ந்த நீண்ட மரங்களும்; மற்றும் கிரிக்குலம் எல்லாம் - மற்றும் மலைக் கூட்டங்கள் எல்லாமும், எண்ணெய் தோய்ந்தென எரிந்தன - எண்ணெயில் தோய்ந்தன போல எரியலாயின.
அளக்கர்ப்பண்ணை - கடலாகிய நீர் நிலை. நெருப்பை அணைப்பது நீர் அந்த நீரும் இராமன் அம்புகளால் கொதித்து, அந்த நெருப்புக்கு எண்ணெய் போல எரிவதற்கு உதவியது என்பது கருத்து. வெம்புனல் பட, நெருப்பொடு பற்றி நெடுமரம், கிரிக்குலம் எரிந்தன என இயையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the Lord's fierce arrows cut through it, the hot water of the sea-basin
- splashed and rose, and wherever it fell, it caught fire along with it;
- the tall trees rooted firmly in the earth, and besides,
- all the ranks of mountains burned as though soaked in oil.
What the poem says
The arrows send the boiling seawater flying up onto the land, and wherever it lands it carries fire with it. Tall, deep-rooted trees and whole ranges of hills burn as if drenched in oil. The irony, as the commentary notes, is that water, which normally puts fires out, has itself become fuel for the fire.