கம்பராமாயணம் 6664 · யுத்த 6.32

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெய்வ நாயகன் தெரிகணை, 'திசைமுகத்து ஒருவன்
வைவு இது ஆம் என, பிழைப்பு இல மனத்தினும் கடுக,
வெய்ய அந்நெருப்பு இடை இடை பொறிந்து எழ வெறிநீர்ப்
பொய்கை தாமரை பூத்து எனப் பொலிந்தது புணரி.

பொருள் · Meaning in Tamil

தெய்வ நாயகன் தெரிகணை - தெய்வங்களுக் கெல்லாம் தலைவனான இராமபிரான் தெரிந்தெடுத்து எய்த அம்புகள்; திசை முகத்து ஒருவன் வைவு இதாமென - பிரமதேவன் கொடுத்த சாபம் இது என்று கூறும்படி; பிழைப்பில மனத்தினும் கடுக - தவறுதலின்றி மனத்தைவிட வேகமாகச் செல்ல; வெய்ய அந்நெருப்பு இடையிடை பொறித்து எழ - அதனால் வெம்மை நிறைந்த நெருப்பு இடையிடையே தீப்பொறிகளுடன் மேலே எழ; புணரி - அக்கடல்; வெறி நீர்ப் பொய்கை - மணம் மிக்க நீரையுடைய பொய்கை; தாமரை பூத்தெனப் பொலிந்தது - தாமரை மலர்களைப் பூத்தது போலப் பொலிந்தது.

தெரிகணை - தெரிந்தெடுத்து எய்த அம்புகள். திசை முகத்தொருவன் - பிரமன். வைவு - சாபம். பிரமனின் சாபம் தவறாது சென்று சபிக்கப்பட்டவர்களை, அதன் பயனைத் துய்க்கச் செய்யுமாதலின் - இலக்கை நோக்கித் தவறாது சென்று பாயும் அம்புகளை 'வைவு இதாம் என' என்றார். தாமரை மலர்ந்த பொய்கை உவமானம் நெருப்புப் பற்றி எரியும் கடல் உவமேயம். கடுக - விரைந்து செல்ல.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The chosen arrows of the Lord of the gods, as if they were
  2. the curse of the Four-Faced One, sped unerring, swifter than the mind;
  3. with that fierce fire sparking up here and there, the sea
  4. shone like a pool of fragrant water where lotuses have bloomed.

What the poem says

Rāmaṉ's chosen arrows fly unerringly, faster than thought, like a curse spoken by Piramaṉ, which never fails to reach its target. Tongues of fire break out here and there across the sea, so that the ocean looks like a fragrant pond full of red lotuses in bloom: the flames are the flowers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teyva nāyakaṉ teri kaṇai, 'ticai mukattu oruvaṉ
vaivu itu ām eṉa, piḻaippu ila maṉattiṉum kaṭuka,
veyya an neruppu iṭai iṭai poṟittu eḻa veṟi nīrp
poykai tāmarai pūtteṉap polintatu puṇari.