கம்பராமாயணம் 6665 · யுத்த 6.33

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செப்பின் - சொல்லுவோமானால்; மேலவர் சீறினும் - மேலோர்கள் வெகுண்டாலும்; அது சிறப்பாதல் தப்புமே - அது நன்மையாவது தவறுமோ? (தவறாது); அது கண்டனம் - அதனை இப்போது நேரிலே பார்த்தோம்; உவரியில் தணியா உப்பு வேலை என்று - கடலில் குறையாத உப்பு நிறைந்திருத்தலால் 'உப்புக்கடல்' என்று; உலகு உறு பெரும் பழி நீங்கி - உலகம் இது வரை கூறிய பெரியபழி இன்று நீங்கி; அப்பு வேலையாய் நிறைந்தது - அம்புக் கடலாக நிறைந்திருந்தது; அளக்கர் குறைந்ததோ - கடல் குறைவுற்றதோ; (இல்லை)

மேலவர் - கல்வி அறிவு நிரம்பிய மேலோர் 'உவரியில் அது கண்டனம் என இயைத்துப் பொருள் கூறினும் அமையும். அப்பு - நீர்அம்பு என்பது வலிந்து அப்பு என ஆயிற்று. இரு பொருள் படக் கூறியதோர் நயம். நல்லோர் சினந்தாலும் நன்மை உண்டு என்பதைக் கடலால் தெரிந்து கொண்டோம் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If one speaks of it, even when the great are angry, does it fail
  2. to turn out a blessing? We saw that in the sea: freed of the great reproach
  3. the world laid on it, 'the salt sea that never changes',
  4. it was filled as a sea of 'appu'; was the ocean any the less?

What the poem says

The poet steps back with a playful conclusion: even the anger of the great ends up doing good. The sea had always been mocked as 'the salt sea'. Now it is full of 'appu', which means both 'water' and, as a form of ampu, 'arrows'. So the sea is no less full than before, and it has lost its old reproach of being salty. The pun is the heart of the verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceppiṉ mēlavar cīṟiṉum atu ciṟappu ātal
tappumē? atu kaṇṭaṉam uvariyil; 'taṇiyā
uppu vēlai' eṉṟu ulaku uṟu perum paḻi nīṅki,
appu vēlaiyāy niṟaintatu; kuṟaintatō, aḷakkar?