கம்பராமாயணம் 6666 · யுத்த 6.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாரை உண்ட பேரண்டங்கள் அடங்கலும் - ஒன்றன் மேல் ஒன்றாக ஒழுங்குபட அமைந்துள்ள பெரிய அண்டங்கள் அனைத்தையும்; வாரி உண்டு அருள் செய்தவற்கு - ஊழிக் காலத்திலே அவை அழியாத படி அண்டங்களை எல்லாம் வாரி உண்டு காத்து அருள் செய்தவனாகிய எம்பெருமானுக்கு; இது ஒரு வலியோ - கடல் நீரை வற்றச் செய்த இது ஒரு வலிமையே; பாரை உண்பது படர்புனல் - நிலத்தை உண்பது நிறைந்து பரவும் நீரான கடல்; அப்பெரும் பரவை நீரை - அந்தப் பெரிய கடலில் உள்ள தண்ணீரை; உண்பது நெருப்பு - உண்ணும் வலிமை உடையது நெருப்பு; எனும் அப்பொருள் நிறுத்தான் - என்று கூறும் அந்தப் பொருளை நிலை நாட்டி விட்டான்.
தாரை - ஒழுங்கு. அவையனைத்தும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒழுங்குற இருப்பதால் 'தாரையுண்ட பேரண்டங்கள்' என்றார். அடங்கலும் - முற்றிலும் (எல்லாமும்). அருள் செய்தவனுக்கு இது ஒரு வலிமையோ (அல்ல) என்றார் 'நிலத்தை நீர் உண்ணும்' நீரை நெருப்புண்ணும் நெருப்பைக் காற்று உண்ணும் காற்று விசும்பிலடங்கும்' என்பது சமயநூல் கூறும் உண்மை 'அந்தப் பொருளை நிலை நாட்டி விட்டான்' என, வியந்து கூறுவது அறிந்து மகிழ்தற்குரியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For him who, by himself, scooped up and swallowed in his grace
- all the great worlds set in their ordered tiers, is this any feat?
- 'The spreading water swallows the earth; the water of that great sea
- is swallowed by fire': that is the truth he has established!
What the poem says
For the god who at the end of an age swallows all the ordered worlds to keep them safe within himself, drying up a sea is no great feat. Rāmaṉ is Tirumāl, and this is only a small display of his power.
What he has done, the poet says with delight, is to prove a teaching of the scriptures about cosmic dissolution: earth dissolves into water, water is consumed by fire, fire by wind, and wind into space.