கம்பராமாயணம் 6667 · யுத்த 6.35

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மங்கலம் பொருந்திய தவத்து மாதவர் - நன்மை பொருந்தியதாகிய சிறந்த தவத்தைச் செய்யும் மாமுனிவர்கள்; கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார் - இரவும், பகலும் எப்போதும் அந்தக் கடலிலே தங்கியிருப்பவர்கள்; அங்கம் வெந்திலர் - சுடுகணைகளாலே உடல் வேகப் பெற்றிலர்; அவன் அடிகள் எண்ணலால் - அப்பரமனுடைய திருவடிகளையே எப்போதும் எண்ணியிருப்பவர்களாதலால்; பொங்கு வெங்கனல் எனும் - பொங்கி எரியும் வெம்மைமிக்க நெருப்பு என்று கூறப்படும்; புனலில் போயினார் - நீரிலே செல்லலாயினர்.

தவத்தால் எல்லா நன்மைகளையும் எய்தலாகும் என்பதால் தவமுனிவர்களை 'மங்கலம் பொருந்திய தவத்து மாதவர்' என்றார் நீரிலும் நெருப்பிலும் நின்று தவம் செய்வது போலவே முனிவர்கள் கடலுள்ளும் தங்கித்தவம் செய்பவர் போலும். இராமன் அம்புகள் கடலை வற்றச் செய்து - மீனினங்கள் வெந்து கருகச் செய்த போதும் கடலுள் தவம் செய்வோர் அங்கம் வெந்திலர் என்றார்; அதற்குக் காரணம் கூறுபவரைப்போல "அவன் அடிகள் எண்ணலால்" கனல் என்னும் பெயர் கொண்ட புனலில் போயினார்' என்றார் பரமன் திருவடிகளையே தியானித்திருந்த அம்முனிவர்களை அம்பின் வெப்பம் தாக்கவில்லை. கனல் புனலாயிற்று என்ற நயம், கருதி மகிழ்தற்குரியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great ascetics of auspicious penance,
  2. who dwell night and day within that sea,
  3. were not burned in their limbs, because they meditated on his feet;
  4. they moved through water that was called a surging, fierce fire.

What the poem says

Some sages perform their penance inside the sea, as others do standing in water or amid fires. When the ocean turns to fire, they are unharmed, because their minds are fixed on the feet of the Lord, that is, of Rāmaṉ himself. For them the blazing 'fire' remained water. The poet turns the image around: what was fire for all else became water for the devout.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṅkalam poruntiya tavattu mā tavar
kaṅkulum pakalum ak kaṭaluḷ vaikuvār
aṅkam ventilar avaṉ aṭikaḷ eṇṇalāl;
poṅku veṅ kaṉal eṉum puṉalil pōyiṉār.