கம்பராமாயணம் 6668 · யுத்த 6.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தென்திசை குட திசை முதல திக்கெலாம் - தெற்கு, மேற்கு முதலான எல்லாத் திசைகளிலும்; துன்றிய பெரும்புகைப்படலம் சுற்றலால் - நெருங்கிய நிறைந்த புகைப்படலம் சுற்றிச் சூழ்தலால்; கதிரவன் பரி - சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள்; கன்றிய நிறத்தன - தமக்குரிய பச்சை நிறம் நீங்கிக் கன்றிய நிறத்தை உடையனவாய்; நின்றன சென்றில நெறியின் நீங்கின - வழி தவறிப் போய் மேற் கொண்டு செல்லாதனவாய் நின்றன.
படலம் - திரட்சி. சூரியனுடைய குதிரைகள் பச்சை நிறம் உடையவை என்பது புராணக் கொள்கை. புகைப்படலத்தால் எதையும் பார்க்க இயலாமையின் வழிதவறியும், மேலே செல்ல இயலாமலும் நின்றன என்பதனை 'நின்றன சென்றில நெறியின் நீங்கின' என்றார்! நின்றன சென்றில - செல்ல இயலாது நின்றன என்பது பொருள். நிறத்தன, சென்றில இவை முற்றெச்சம்; நின்றன என்பது கொண்டு முடிந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because a great, dense pall of smoke wrapped
- all the directions, south, west and the rest,
- the horses of the sun, their colour darkened,
- stood still; they did not go on; they strayed from their path.
What the poem says
The smoke from the burning sea spreads over every direction. The sun's horses, green in Purāṇic tradition, are blackened by it, and, unable to see, they lose their way, stop, and cannot go on. The sun itself is halted in its course.