கம்பராமாயணம் 6669 · யுத்த 6.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பிறிந்தவர்க்கு உறு துயர் - பிரிந்து வாழ்பவருக்கு உற்ற துன்பம்; என்னும் பெற்றி - என்னும் தன்மையை; அறிந்திருந்து - அத்துன்பத்தை அறிந்திருந்தாலும்; அறிந்திலர் அனையர் ஆம்என - அறியாதவரைப் போன்றவராவர்; செறிந்த தம் பெடைகளைத் தேடி - நிறைந்த தம் பெண் பறவைகளைத் தேடி வந்து; தீக்கொள மறிந்தன கரிந்தன வானப்புள் எலாம் - நெருப்புப் பற்றியதால், ஆண்பறவைகளெல்லாம் வீழ்ந்து கருகி மாண்டன.
துணையைப் பிரிந்தவர்கள் துன்பம் அனுபவிப்பார்கள் என்பதை இராமபிரான் அறியாதிருக்க முடியாது. அப்படி அறிந்த பெருமானே பெண் பறவைகள் இறந்து போகும்படி செய்து விட்டானே என்று சொல்லிக் கொண்டே தம் பேடுகளை நாடிச் சென்ற ஆண் பறவைகள் கனலில் வீழ்ந்து மாண்டன. இது இச் செய்யுளில் கற்பனை செய்து உரைக்கும் செய்தி. 'பிரிந்தவர்' என்ற சொல் எதுகை நோக்கிப் 'பிறிந்தவர்' என வந்தது. மறிந்தன (வாய்: முற்றெச்சம். ஓர் அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying, 'Those who know the grief that comes to the separated
- are, it seems, like those who know it not',
- the birds of the sky went searching for their close-clinging mates, and as the fire caught them,
- they all fell and were burned.
What the poem says
The birds of the sky fly about looking for their mates in the smoke and are caught by the fire, fall and burn. The poet imagines them reproaching Rāmaṉ: he, of all people, knows the pain of separation from a beloved, yet acts as if he did not, letting their mates die. It is a poignant touch, for Rāmaṉ's whole campaign is driven by his separation from Cītai.