கம்பராமாயணம் 6670 · யுத்த 6.38

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கமை அறு கருங்கடல் - பொறுமையற்று எப்போதும் முழங்கிக் கொண்டிருக்கும் கரிய கடல்; கனலி கை பரந்து - இராமபிரான் எய்த அம்புகளால் உண்டான நெருப்பு பக்கங்களிலெல்லாம் பரவ; அமை வனம் ஒத்த போது - தீப்பிடித் தெரிந்த மூங்கிற் காட்டை ஒத்திருந்தபோது; அறைய வேண்டுமோ - அதைக் கூற வேண்டுமோ? சுமை உறு பெரும்புகைப்படலம் சுற்றலால் - சுமை பொருந்திய பெரிய புகைப்படலம் சூழ்ந்தமையால்; இமையவர் இமைத்தனர் - இமையா நாட்டம் கொண்ட தேவர்கள் கண்களை இமைக்கலாயினர்; வியர்ப்பும் எய்தினர் - உடம்பில் வியர்வையும் எய்தினார்கள்.

கமை - பொறுமை, கடல் எப்போதும் ஓய்வின்றி முழங்கிக் கொண்டே இருப்பதால் 'கமை அறு கருங்கடல்' என்றார். எங்கும் நெருப்பு பரவி எரிந்து கொண்டிருப்பது, மூங்கிற்காடு தீப்பிடித் தெரிவதை ஒத்திருந்தது என்பதை 'கனலி கை பரந்து அமைவனம் ஒத்தபோது' என்றார் அமை - மூங்கில்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the restless dark sea, with fire spreading through it,
  2. became like a bamboo forest ablaze, need it be told?
  3. Because the heavy, great pall of smoke wrapped round them,
  4. the unblinking gods blinked, and broke into sweat as well.

What the poem says

The ever-restless, roaring sea is now like a burning bamboo forest; nothing more needs saying. The thick smoke rises so high that the gods, who by nature never blink and never sweat, are made to do both. It is a sign of how far the disaster reaches.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kamai aṟu karuṅ kaṭal kaṉali kaiparantu
amai vaṉam otta pōtu aṟaiya vēṇṭumō?
cumaiyuṟu perum pukaip paṭalam cuṟṟalāl
imaiyavar imaittaṉar viyarppum eytiṉār.