கம்பராமாயணம் 6671 · யுத்த 6.39

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூச்செலாதவள் - பூமேல்கூட நடக்க முடியாதவளாகிய சீதையின்; நடை போல்கிலாமையால் - நடையை ஒத்தில்லாமையினால்; ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும் - பழிப்புக்கு ஆளாகிய அன்னப் பறவைகள் எல்லாம்; தீச்செலா நெறி பிறிது இன்மையால் - தீ செல்லாத வழி வேறு எதுவும் இல்லாமையாலே; திசை மீச் செலா - எல்லாத் திசைகளிலும் மேலே பறந்து செல்ல; புனலவன் புகழின் வீந்தவால் - அதனால், கடலரசனான வருணனது புகழ் எவ்வாறு அழிந்ததோ அதுபோல அழிந்தொழியலாயின.

பூச் செலாதவள் - சீதாபிராட்டியின் மென்மை குறித்தது. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (குறள் 1120) என்ற வள்ளுவர் கற்பனையை ஒப்பிட்டுப் பிராட்டியின் திருவடி மென்மையை உணர்க. சீதையின் நடை போன்ற அழகிய நடை அன்னங்களுக்கில்லாமையால் பழிப்புக்கு அவை ஆளாயின என்பதை 'நடை போல்கிலாமையால் ஏச்செலாம் எய்திய எகினம்' என்றார் 'ஏச்சுச்சகிக்காத அன்னம் தீயில் வீழ்ந்து இறந்தது' என்பது கருத்து. நெருப்பின் வெம்மையால் கருகிய காட்சியைக் கற்பனை மெருகூட்டிக் கம்பர் கூறுகிறார் புனலவன் - கடலரசனான வருணன். இராம பிரானுடைய அம்புகளால் அவன் புகழ் அழிந்தது. அது போல அன்னங்கள் அழிந்தன என்றார் மீச்செலா - மேலே சென்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the swans, which had borne every reproach
  2. because their gait could not match hers who cannot walk even on flowers,
  3. flew up over the directions, since there was no path the fire did not reach,
  4. and perished, like the fame of the lord of the waters.

What the poem says

The swans had long been mocked because their famous gait could not match that of Cītai, so delicate she cannot even walk on flowers; the commentary recalls Tiruvaḷḷuvar's couplet in which even swan's down feels like thorns to a beloved's feet. Now, with fire everywhere and no escape, the swans fly up and perish, just as Varuṇaṉ's reputation has perished under Rāmaṉ's arrows. The poet imagines them as unable to bear the reproach any longer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūc celātavaḷ naṭai pōlkilāmaiyāl
ēccu elām eytiya ekiṉam yāvaiyum;
tīc celā neṟi piṟitu iṉmaiyāl ticai
mīc celā; puṉalavaṉ pukaḻiṉ vīntavāl.