கம்பராமாயணம் 6672 · யுத்த 6.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பம்புறு நெடுங்கடல் பறவையாவையும் - எங்கும் பரந்துள்ள நீண்ட கடலில் வாழும் நீர்ப்பறவைகள் அனைத்தும்; உம்பரில் செல்லலுற்று - மேலே வானத்தில் செல்லத் தொடங்கி; உருகி வீழ்ந்தன - நெருப்பில் வெந்து உருத் தெரியாது உருகி விழுந்தன; அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல - மேகங்கள் வானத்திலே செல்ல இயலாதனவாய், எரியும் மெய்யன - உடலெல்லாம் தீயில் வெந்து எரிய; இம்பரில் உதிர்ந்தன - தரையில் உதிர்ந்து விழுந்தன.
பம்புதல் - பரந்திருத்தல்; ஒலித்தலுமாம். உம்பர் - வானம். உருகி - உருத்தெரியாதபடி உருகிப் போய். அம்பரம் - மேகம்; வானம். இம்பர் - நிலம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the birds of the vast, teeming sea
- tried to rise to the sky and fell melting;
- the clouds, unable to move in the sky,
- dropped down to earth with their bodies on fire.
What the poem says
The sea birds try to escape upward but melt in the heat and fall. Even the clouds cannot keep moving across the sky: set alight, they drop to the ground. The verse plays on 'amparam', which means both cloud and sky: the amparam could not travel in the amparam.