கம்பராமாயணம் 6673 · யுத்த 6.41

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பட்டன படப்பட படாத புட்குலம்
சுட்டு வந்து எரிக் கனல் படலம் சுற்றலால்
இட்டுழி அறிகில இரியல் போவன
முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம்.

பொருள் · Meaning in Tamil

சுட்டு வந்து எரிக்குலப் படலம் சுற்றலால் - சுட்டுக் கொண்டே வந்த நெருப்புப் படலம் எங்கும் சூழ்ந்து இருத்தலால்; பட்டன படப்பட - பறவைக் கூட்டம் தீயில் வெந்து இறப்பன இறந்து கொண்டே இருக்க; படாத புட்குலம் - இறக்காத பறவைக் கூட்டம், இட்டுழி அறிகில - புகையும் நெருப்பும் சூழ்ந்திருத்தலால் தமது முட்டைகளை இட்ட இடத்தை அறியாதனவாய்; இரியல் போவன - பாதுகாப்பான வேறு இடத்துக்குச் செல்லுபவை; வெளுத்த முத்து எலாம் - வெண்மை நிறமான முத்துக்களை எல்லாம்; முட்டை என்று எடுத்தன - முட்டை என நினைத்து எடுப்பனவாயின.

எரிக்குலப்படலம் - நெருப்பின் தொகுதி. இட்டுழி - (முட்டை) இட்ட இடம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As those that perished kept perishing, the flocks of birds that had not perished,
  2. since a mass of fire came scorching and closed around them,
  3. could not tell where they had laid, and as they fled,
  4. they picked up all the white pearls, thinking them their eggs.

What the poem says

While bird after bird dies in the flames, the survivors flee. Lost in the smoke and fire, they cannot find where they laid their eggs, and in their panic they carry off the white pearls lying exposed on the dried seabed, mistaking them for eggs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭṭaṉa paṭap paṭap paṭāta puṭ kulam
cuṭṭu vantu erik kulap paṭalam cuṟṟalāl
iṭṭuḻi aṟikila iriyal pōvaṉa
muṭṭai eṉṟu eṭuttaṉa veḷutta muttu elām.