கம்பராமாயணம் 6674 · யுத்த 6.42

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வள்ளலைப் பாவியேம்"மனிசன்" என்று கொண்டு
எள்ளல் உற்று உறைந்தனம்; எண் இலாம்'என
வெள்ளி வெண் பற்களைக் கிழித்து விண் உறத்
துள்ளலுற்று இரிந்தன குரங்கு சூழ்ந்தில.

பொருள் · Meaning in Tamil

பாவிகாள் - பாவிகளே! வள்ளலை மனிசன் என்று கொண்டு - இராமபிரான் மனிதன் தானே என நினைத்து; எள்ளலுற்று அறைந்தனம் - ஏளனமாகப் பேசினோம்; எண் இலாம் - இராமபிரானுடைய பேராற்றலை அறியும் ஆராய்ச்சி இல்லாதவரானோம், என வெள்ளி வெண் பற்களைக் கிழித்து - என்று கூறி வெள்ளி போன்ற வெண்மையான பற்களைக் காட்டி இளித்துக் கொண்டு; குரங்கு சூழ்ந்தில - நீரில் வாழும் குரங்குகள் அந்தக் கடலைச் சூழ்ந்து கொண்டிருக்காமல்; விண்உறத் துள்ளலுற்று இரிந்தன - வானத்தின் மீது துள்ளி விலகிச் செல்லலாயின.

புனலை, கனலாகச் செய்த இராமபிரானைச் சாதாரண மனிதன்தானே என்று எண்ணி இத் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததே என்ற குரங்குகளின் தவிப்புத் தெரிகிறது. குரங்குகள் பற்களைக் காட்டி இளிப்பது இயல்பு என்பதால் 'பற்களைக் கிழித்து' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Sinners that we are, we took the Bountiful One for a mere man
  2. and spoke of him with scorn; we had no sense!' So saying,
  3. baring their silver-white teeth, the monkeys did not stay around the sea
  4. but leapt up toward the sky and fled.

What the poem says

The sea monkeys, creatures believed to live in the ocean, flee, leaping toward the sky with their white teeth bared, as monkeys do. They cry out that they were sinners to have thought Rāmaṉ a mere man and mocked him, and foolish not to have recognised his power. Their regret echoes Rāmaṉ's own complaint that the sea took him for an ordinary human.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaḷḷalai, pāvikāḷ, "maṉicaṉ" eṉṟu koṇṭu
eḷḷaluṟṟu aṟaintaṉam; eṇ ilām' eṉa
veḷḷi veṇ paṟkaḷaik kiḻittu viṇ uṟat
tuḷḷaluṟṟu irintaṉa kuraṅku cūḻntila.