கம்பராமாயணம் 667 · பால 10.115
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அழைக்கப்பட்ட தேவர்கள்) அரைசன் - விசுவாமித்திரன்; இப் புலையற்கு - இந்தப் புலையனுக்காக; அனல் துறைமுற்றி - யாக காரியத்தை நிறைவேற்றத் தொடங்கி; எம்மை - எங்களை; வல்லை விரைசுக என்பான் - விரைவில் வருவீராக என்று அழைக்கின்றான்; என்னே விழுமிது - மிக நன்று இச்செயல்; என்று இகழ்ந்து - என்று நிந்தித்து; நக்கார் - ஏளனம் செய்து சிரித்தார்கள்; புரைசை மாக்களிறு - (ஆயினும் கோசிகன் விடாமல்) கழுத்திலே கயிறு கொண்ட யானைப்படையுடைய; வேந்தை - அத் திரிசங்குவை நோக்கி நீ துறக்கம் போய்ச் சேர்ந்திடுக; யானே தவத்தின் - நானே எனது தவத்தால், உரை செய்தேன் - கட்டளையிட்டுக் கூறுகிறேன்; என்ன - என்று சொல்ல (அவ்வாறே திரிசங்கு); விமானத்து உம்பர் - (கிடைத்த ஒரு) விமானத்தின் மேல்; ஓங்கினன் - ஏறி உயரச் சென்றான்.
கோசிகன் வெகுநேரமாக மந்திரங்களைச் சொல்லி அழைத்தும் அவிர்ப் பாகத்தைப் பெறத் தேவர்கள் வாராமையால் பெருஞ்சினம் கொண்டான்; ஓமம் செய்யும் அகப்பையை உயர எடுத்து, 'யாகம் இருக்கட்டும் என் தவத்தின் பயனால் இவ் வுடம்புடன் சுவர்க்கம் செல்லுக' என்றான்; முனிவர் யாவரும் காணத் திரிசங்கு சுவர்க்கம் சென்றான் என்பது. விழுமிது - இகழ்ச்சிக் குறிப்பு: எதிர் மறை இலக்கணை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The king completes a fire rite for this outcaste and tells us
- "Hurry, come quickly" — how excellent!' they scoffed and laughed.
- To the king of great elephants with neck-ropes he said, 'Go to heaven; I myself
- command it by my penance,' and he rose up in an aerial car to the heavens.
What the poem says
The gods refuse to come and mock Kaucikaṉ: a king acting as priest for an outcaste and bidding them hurry — splendid indeed! Their "excellent" is pure sarcasm.
Furious that no god will accept the offering, Kaucikaṉ abandons the rite and commands Tiricaṅku to go to heaven by the power of his own penance alone. Before the eyes of all the sages, Tiricaṅku rises upward in a celestial chariot.