கம்பராமாயணம் 6676 · யுத்த 6.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பசும் பொனின் மானங்கள் - (இராமபிரான் அம்புகளால் எங்கும் தீ எரிய) வானத்தில் செல்லும் பொன்னால் அமைந்த விமானங்கள் எல்லாம்; உருகப் பாய்ந்தன - தீயின் வெப்பத்தால் உருகிப் பொழிந்தவை; தசும்பிடை விரிந்தன என்னும் தாரைய - நீர்க்குடங்கள் உடைந்தால் நீர்தாரைதாரையாய் ஒழுகுவது போல் இருந்தன; வான ஆறெலாம் - விண்ணுலகிலுள்ள ஆகாய கங்கை முதலான ஆறுகள்; அசும்பறவறந்தன - ஈரம் சிறிது மின்றி வறண்டு போயின; விசும்பிடை விளங்கிய - ஆகாயத்திலே ஒளிர்ந்த; மீனும் வெந்தவே - விண்மீன்களும் வெந்தன.
மானம் - விமானம். தசும்பு - நீர்க்குடம். வானயாறு - ஆகாய கங்கை. அசும்பு - நீர்க்கசிவு (ஈரம்). மீன் - விண்மீன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In streams like water bursting from broken pots,
- the aerial cars of fresh gold melted and poured down;
- all the rivers of the sky dried up without a trace of moisture;
- even the stars that shone in the heavens were burned.
What the poem says
The heat reaches the heavens. The golden flying chariots of the gods melt and pour down in streams, like water gushing from broken pots. The heavenly rivers, such as the celestial Gaṅgā, dry up completely, and even the stars are scorched.