கம்பராமாயணம் 6677 · யுத்த 6.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குறுமுனி எனக் கடல் குடித்த கூர்ங்கணை - குறுகிய வடிவினரான அகத்திய முனிவரைப் போல, கடல் நீரை எல்லாம் குடித்த (இராமபிரான் எய்த) கூரிய அம்புகள்; செறிவுறு செம்மைய - செறிவுற்று செம்மை வாய்ந்தன; தீயை ஓம்புவ - தீயை வளர்ப்பன; நெறியுறு செலவின - நெறியில் செல்லும் செலவினை உடையன; தவத்தின் நீண்டன - நெடியதவத்தை உடையன; உறுசினம் உற - மிக்க கோபம் கொண்டிருப்பதால்; பல உருவு கொண்டன - பல வடிவங்களைக் கொண்டன.
குறுமுனி - அகத்தியர். ஓம்புதல் - விரும்பிவளர்த்தல். உறுசினம் - மிகுந்த கோபம். அம்புகள் குறுமுனிவரைப் போலக் கடல் நீரைக் குடித்தன எனக் கூறவந்தவர் குறுமுனிக்கும், அம்புக்கும் சிலேடை கூறினார். இது செம்மொழிச்சிலேடை. அகத்தியர்: செம்மை உடையவர்; வேள்வித்தீயை வளர்ப்பவர்; நன்னெறியில் செல்லுபவர்; நீண்டதவம் உடையவர்; சினத்தால் பல வடிவம் கொள்பவர்; கடலைக் குடித்தவர் அம்புகள்: தீயைப் போலச் செம்மை நிறம் உடையவை; தீயை வளர்ப்பவை; செலுத்தும் நெறியே செல்லுபவை; இராமன் கை தீண்ட தவம் உடையவை; கோபத்தால் பல வடிவம் கொள்பவை; கடல் நீரைப் பருகியவை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Full of deep redness, tending the fire,
- keeping to the true path in their going, long in their austerity,
- taking many forms in their great wrath,
- the sharp arrows drank the sea like the Short Sage.
What the poem says
A sustained pun compares Rāmaṉ's arrows to the sage Akattiyar, the 'Short Sage', who once drank up the whole ocean. Each phrase fits both. The sage is upright, keeps the sacrificial fire, walks the righteous path, has long penance, takes many forms in anger, and drank the sea. The arrows are red as fire, feed the fire, fly true to their course, are 'long' and 'heated', multiply in their fury, and drank the sea too.