கம்பராமாயணம் 6678 · யுத்த 6.46

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மோதல் அம் கனைகடல் - அலைமோதுகின்ற முழங்கு கின்ற கடலில் பற்றி; முருக்கும் தீயினால் - முழக்கத்துடன் எரிகின்ற நெருப்பினால்; பூதலம் காவொடும் எரிந்த - கடலைச் சூழ்ந்துள்ள நிலமெல்லாம் அங்குள்ள சோலைகளோடும் எரிந்தது; பொன் மதில் வேதலும் - இலங்கைக்கு அரணாக அமைந்துள்ள பொன்னாலான மதிலும் வெந்து போகவும்; இலங்கையும் - இலங்கையில் வாழும் அரக்கர்கள் எல்லாம்; போயின தூதன் மீளவந்தான் என - இங்கு வந்து இலங்கைக்கு எரியூட்டிப் போன தூதன் மீண்டும் வந்தான் என்று; துணுக்கம் கொண்டதால் - திடுக்கிட்டனர்

கனைகடல் - ஒலிக்கும் கடல். முருக்கும் - எரியும். கா - சோலை. பூதலம் - நிலம். தூதன் - இராம தூதனாகிய அனுமான். துணுக்கம் கொள்ளுதல் - திடுக்கிடுதல். இலங்கை நகரம் முழுதும் பாழ்படத்தீயால் எரித்த அனுமனது செயல் போல, அம்புகளால் எழுந்த தீயின் செயலும் இருப்பதால் தூதன் வந்தான் என, இலங்கை துணுக்கம் கொண்டது என்றார். 'இலங்கை' இடவாகு பெயர்; இலங்கையில் வாழ்பவர்களை உணர்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. By the fire ravaging the dashing, roaring sea,
  2. the land burned with its groves, and as the golden wall
  3. was scorched, Ilaṅkai too took fright, thinking
  4. 'The messenger who left has come back!'

What the poem says

The fire spreading from the sea burns the coastlands and their groves and even scorches Ilaṅkai's golden walls. The people of Ilaṅkai panic: they think the messenger who burned their city before, Aṉumaṉ, has come back again. 'Ilaṅkai' here stands for its inhabitants.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mōtal am kaṉai kaṭal murukkum tīyiṉāl
pūtalam kāvoṭum erintu poṉ matil
vētalum ilaṅkaiyum mīḷap pōyiṉa
tūtaṉ vantāṉ eṉat tuṇukkam koṇṭatāl.