கம்பராமாயணம் 6679 · யுத்த 6.47

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருக்கனில் ஒளிவிடும் ஆடகக் கிரி - சூரியனைப் போல ஒளிவீசும் பொன்னிற மலையான திரிகூடமலையானது, உருக்கு என உருகின - தீயால் வெந்து, அரக்கு உருக்குப் போல உருகலாயின; உதிரம் தோய்ந்தன - அதனுடன் இரத்தமும் தோய்ந்தமையால்; முருக் கெனச் சிவந்தன - முருக்க மலர் போலச் சிவந்து தோன்றின; பவளக் காடு எலாம் - கடலில் உள்ள பவளக்காடுகளெல்லாம்; முறிய வெந்தன - அழியும்படி வெந்து போயினவாய்; கரிக்குவை நிகர்த்தன - கரிக்குவியல்களை ஒத்திருந்தன.

அருக்கன், சூரியன். ஆடகக் கிரி (இலங்கையின் நடுவே இருந்த திரிகூட மலை) உருக்கு. அரக்குருக்கு (அரக்குக் கட்டி) முருக்கு - முள் முருங்கை மலர். திரிகூட மலை மூன்று சிகரங்களைக் கொண்டது என்பதால் 'உருகின' எனப் பன்மையில் கூறினார். 'அருக்கனில்' என்பதன் இல், உருக்கு 'என' என்பதன் 'என' 'முருக் கென' என்பதன் 'என' என்பன உவமை உருபுகளாகும். பவளக்காடு - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The golden mountain that shines brighter than the sun
  2. melted like molten lac; steeped in blood,
  3. it turned red as murukku blossoms; and all the forests of coral
  4. were burned to breaking and looked like heaps of charcoal.

What the poem says

The heat even melts the golden peaks of Tirikūṭam, the three-peaked mountain at the centre of Ilaṅkai, which flows like molten lac and, mixed with blood, turns as red as the flowers of the murukku (coral) tree. Meanwhile the coral forests of the sea, normally red, are burned black and look like piles of charcoal: the red has turned black and the gold has turned red.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arukkaṉil oḷi viṭum āṭakak kiri
urukku eṉa urukiṉa utiram tōyntaṉa
murukku eṉac civantaṉa; muriya ventaṉa
karik kuvai nikarttaṉa pavaḷak kāṭu elām.