கம்பராமாயணம் 6681 · யுத்த 6.49

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுருள்கடல் திரைகளைத் தொலைய உண்டு அனல்
பருகிடப் புனலில பகழி பார் இடம்
மருள் கொளப் படர்வன நாகர் வைப்பு எலாம்
இருள் கெடச் சென்றன இரவி போல்வன.

பொருள் · Meaning in Tamil

சுருள் கடல் திரைகளைத் தொலைய உண்டு - இராமபிரான் எய்த அம்புகள் சுருண்டு விழும் கடல் அலைகள் அழியுமாறு அவற்றை உண்டு பின்; அனல் பருகிடப் புனல் இலபகழி - நெருப்பு உண்பதற்கு எங்கும் தண்ணீர் இல்லாமையால் அவ்வம்புகள்; பாரிடம் மருள் கொளப் படர்வன - நிலம் மருளும்படி எங்கும் செல்வனவாய்ப்பின்; இரவி போல்வன - சூரியனைப் போன்ற ஒளி உடையனவாய்; நாகர் வைப்பையும் - நாகர்கள் வாழும் நாக உலகத்தையும்; இருள் கெடச் சென்றன - அங்கு இருள் கெடும்படி சென்றடைந்தன.

சுருள்கடல் - சுருண்டு விழும் அலைகளை உடைய கடல். தொலைய - அழிய. நாகர் வைப்பு - நாகர் உலகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having swallowed the curling waves of the sea until they were gone,
  2. the arrows, with no more water for their fire to drink, spread over the earth
  3. so that it was bewildered, and like suns
  4. they went down even to the world of the Nāgas, ending its darkness.

What the poem says

Having drunk up the sea's waves, the arrows find no more water for their fire, so they spread over the land, terrifying the earth. Shining like suns, they plunge into the underworld of the Nāgas, the serpent people, and light up its eternal darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1curuḷ kaṭal tiraikaḷait tolaiya uṇṭu aṉal
parukiṭap puṉal ila pakaḻi pāriṭam
maruḷ koḷap paṭarvaṉa nākar vaippaiyum
iruḷ keṭac ceṉṟaṉa iravi pōlvaṉa.