கம்பராமாயணம் 6682 · யுத்த 6.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரும்புறக் கடல்களோடு - கறுத்துத் தோன்றும் மேற்புறத்தைக் கொண்ட கடல்களோடு; உலகம் காய்ச்சிய இரும்புறச் செல்வன - உலகமும் காய்ச்சிய இரும்பை ஒத்துச் செல்லுவன; இழிவ கீழ்உற - கீழே பொருந்துமாறு இறங்குவனவாய்; அரும்புறத்து அண்டமும் உருவி - சக்கரவாளகிரிக்கு அப்பால் உள்ள செல்லுதற்கரிய புற அண்டத்தையும் ஊடுருவிச் சென்று; அப்புறம் - அதற்கு அப்பால் உள்ள; பெரும்புறக் கடலையும் - பெரும்புறக் கடலையும்; தொடர்ந்து பின் செல்வ - தொடர்ந்து பின் செல்வனவாயின.
இலங்கைக்கு அருகில் எய்த அம்புகள் அப்பாலுள்ள புற அண்டத்தையும் கடந்து பெரும்புறக் கடலையும் தொடர்ந்து சென்றன என அம்பின் ஆற்றலைக் கூறினார். தீயால் கருகியதால் மேற்பரப்பு முழுதும் கறுத்துக் காணப்பட்ட கடலை 'கரும்புறக்கடல்' என்றார். கடல்களும், உலகமுமே' உருகிய இரும்பைப் போல் கீழே இறங்கின என்பதை 'காய்ச்சிய இரும்பு செல்வன இழிவ கீழுற' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Along with the seas whose surface had turned black, the world flowed
- like heated iron and sank down to the depths;
- the arrows pierced through the hard-to-reach outer shell of the cosmic egg, and beyond it
- chased after even the great outer ocean.
What the poem says
The arrows' power reaches the limits of the cosmos. The blackened seas and the land itself flow down like red-hot molten iron. The arrows, shot just off Ilaṅkai, pierce the outer wall of the world-egg beyond the encircling mountain range and pursue even the great outermost ocean that lies past it.