கம்பராமாயணம் 6683 · யுத்த 6.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திடல் திறந்து உகுமணித் திரள்கள் - கடல் நடுவே உள்ள திட்டுகள் எல்லாம் அம்புகளால் பிளக்கப்பட்டு அங்கிருந்து சிந்தும் மணித் திரள்கள் எல்லாம்; சேண் நிலம் உடல் திறந்து - பெரிய நிலம் உடல் பிளந்து, அதனால்; உதிரம் வந்து உகுவ போன்றன - இரத்தம் சிந்துவன போல இருந்தன; கடல் திறந்து எங்கணும் வற்ற - இராமபிரானுடைய அம்புகள் கடலைப் பிளத்தலால் எங்கும் நீரில்லாது வற்றிவிட; கோள் அரா - (அக்கடலின் அடியில் வாழ்ந்த) வலிய நீர்ப் பாம்புகள்; அக்கடல் குடல் திறந்தன எனக் கிடந்தன - அக்கடலின் குடல்கள் கிடந்தன போலக் காணப்பட்டன.
திடல் - திட்டு. சேண் நிலம் - பரவிப் பெருகிய பூமி. கோள் அரா - குறிதப்பாமல் கொள்ளும் பாம்புகள். உகுவ - சிந்த.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The clusters of gems spilling from the split mounds
- looked like blood gushing from the wide earth's opened body;
- as the sea, split open, dried up everywhere, the deadly serpents
- lay there as if they were that sea's opened entrails.
What the poem says
With the seabed cut open by the arrows, the red gems pouring out of its split mounds look like blood flowing from the earth's opened body. The great sea serpents, left lying on the dry bed, look like the entrails of the sea spilled out of its slit belly. The whole sea is pictured as a wounded body.