கம்பராமாயணம் 6686 · யுத்த 6.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூடு பெற்று ஐயனே தொலைக்கும் - சினத்தால் சூடு பெற்று உயிர்களுக்குத் தலைவனான இராமபிரானே அம்பெய்து கொல்லும்; மன்னுயிர் வீடு பெற்றன - நிலைத்துவாழும் உயிரினங்கள் எல்லாம் அழிவில்லாத பேரின்ப வீட்டை எய்தின; இடைமிடைந்த வேணுவின்காடு - இடையிடையே நெருங்கியுள்ள மூங்கில்கள் நிறைந்த காட்டில்; பற்றிய பெருங்கனலின் - பற்றி எரியும் பெருந்தீயைப் போல; கை பரந்து ஓடி - (அம்பின் நெருப்பு) பக்கங்களிலெல்லாம் பரவிச் சென்று; உவரி நீரெலாம் உற்றது - கடல் நீரை அடைந்தது.
'அம்பின் நெருப்பு கடல் நீரை அடைந்தது. மன்னுயிர் யாவும் வீடுபேறு எய்தின' என்பது கருத்து. இராமபிரானால் அம்பெய்து கொல்லப்பட்ட எல்லா உயிர்களும் 'வீடு பெற்றன' என்றார். வேணுவின்காடு - மூங்கில்காடு மூங்கில் காடு தீப்பிடித்தால் விரைவில் எங்கும் பரவுவது இயல்பு என்பதால் 'கனலின் கை பரந்தோடி' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The living beings that the Lord himself destroyed in his heat
- attained liberation; like the great fire that catches
- a forest of close-packed bamboo, spreading on every side,
- the fire ran and reached all the water of the sea.
What the poem says
The creatures killed by Rāmaṉ's arrows are not simply destroyed: to die at the hands of the Lord himself is to attain mōkṣam, final release. Meanwhile the fire spreads across the whole sea with the speed of a blaze racing through a dense bamboo forest.