கம்பராமாயணம் 6687 · யுத்த 6.55

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கால வான் கடுங்கணை - எமனுக் கொப்பான விரையும் அம்புகள்; சுற்றும் கவ்வலால் - கடல் முழுவதையும் கவ்விக் கொண்டதால், மா நிலமகள் - பெரிய நிலமாகிய பூமித்தாய்; நீலவான் துகிலினை நீக்கி - தான் உடுத்திருந்த நீலவானம் போன்ற ஆடையை நீக்கிவிட்டு; பூ நிறக் கோல வான் தனி நெடுங்கூறை - பூ வேலைப்பாடுகளோடு கூடிய செந்நிறமான புத்தாடையை; சுற்றினாள் போல - தனது உடம்பில் சுற்றிக் கொண்டவளைப் போல; பொலிந்து தோன்றினாள் - பொலிவுடன் காணப்பட்டாள்.

நீலநிறமான கடல் நீர் வறண்டு போய் எங்கும் ஒளி சிறந்த சிவந்த அம்புகளே காணப்படுவதால் நிலமகள் நீல ஆடையை நீக்கி ஒளி நிறைந்த செந்நிறமான ஆடையை அணிந்து பொலிந்து தோன்றியது போலக் காணப்பட்டாள் என்று கூறியது நயம் துகில் - பட்டாடை. கூறை - புத்தாடை. மணமகள் அணியும் ஆடையை 'கூறைப் புடவை' என்று கூறுவர் அது செந்நிறமுடையது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the fierce arrows, like Death, gripped it all around,
  2. the great Earth Goddess, putting off her sky-blue garment
  3. and wrapping herself in a single, long, beautiful new cloth the colour of flowers,
  4. appeared resplendent.

What the poem says

The ocean is traditionally the Earth's garment. Now its blue water is gone, and the glowing red arrows cover the seabed. It is as though the Earth Goddess has taken off her blue robe and put on a splendid red one: the kūṟai, the red wedding sari worn by a bride.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāla vāṉ kaṭuṅ kaṇai cuṟṟum kavvalāl
nīla vāṉ tukiliṉai nīkkip pū niṟak
kōla vāṉ taṉi neṭuṅ kūṟai cuṟṟiṉāḷ
pōla mā nilamakaḷ polintu tōṉṟiṉāḷ.