கம்பராமாயணம் 6688 · யுத்த 6.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக் கொற்றவன் - கற்றறிந்தவர்களுக்குள் கற்றவராய் விளங்கும் மேலோர்களின் உணர்வும்கூட காண இயலாத பெருமானாகிய இராமனது; படைக்கலம் குடித்த வேலை விட்டு - அம்புகள் நீர் முழுவதையும் குடித்து விட்ட கடலை விட்டு விட்டு; வடவைத் தீ - கடல் மத்தியிலே வாழும் வடவா முகாக்கினித்த; மற்றொரு கடல் புக - வேறு ஒரு கடலை அடைவதற்காக; உற்று உயிர் படைத்து எழுந்து - வலிமைபெற்று உயிர் கொண்டு எழுந்து; ஓடல் உற்றதால் - ஓடத் தொடங்கியது.
கற்றறிந்த ஞானிகளின் உணர்வுக்கும் எட்டாதவன் பரமன் என்பதால் 'கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக் கொற்றவன்' என்றார். "எங்கள் நான் மறைக்கும் தேவர் அறிவுக்கும் பிறர்க்கும் எட்டாச் செங்கண் மால்" என்று (408) முன்னும் கூறுவது ஒப்பு நோக்கத்தக்கது. வடவைத் தீ வாழும் கடல் நீரையெல்லாம் இராமபிரானது அம்புகள் குடித்துவிட்டதால், வேறு கடலுக்குச் செல்ல எழுந்து ஓடலுற்றது. 'கற்றவர் கற்றவர்' என இருமுறை கூறியது 'கற்றவருள்ளும் பெரிது கற்றவர்' என ஞானியரைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaving the sea whose water was drunk by the weapons of the King
- whom the understanding of the most learned cannot perceive,
- the submarine mare-fire, as though it had gained life, rose up
- and began to run, to enter some other sea.
What the poem says
Vaṭavai, the 'mare-fire', is a fire believed to burn beneath the ocean, kept in check by its waters. Now that Rāmaṉ's arrows have drunk the sea dry, this fire seems to come alive and run off in search of another ocean to live in.
Rāmaṉ is called the King whom even the wisest of the learned cannot grasp, echoing Kampaṉ's earlier description of Tirumāl as beyond the reach of the Vedas and the gods.