கம்பராமாயணம் 6689 · யுத்த 6.57

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலகினை வளைத்து - உலகத்தை எல்லாம் சுற்றி வளைத்துக் கொண்டு; வான் உறச் சூழ் இரும் பெரும் சுடர்ப் பிழம்பு - விண்ணை அளாவிச் சூழ்ந்த பெரிய தீயின் ஒளிப் பிழம்பு எங்கும்; தோன்றலால் - காணப்படுதலால்; அவ்வாழி - அந்தக் கடல்; அன்ன நாள் ஊழியின் உலகெலாம் உண்ண ஓங்கிய - அந்த நாளிலே ஊழிக் காலத்தின் முடிவில் உலகனைத்தையும் உண்ண உயர்ந்த; ஆழியின் பொலிந்தது - ஊழிக் காலத்துப் பெருங் கடலைப் போல விளங்கியது.

வாழியர் - அசை உலகை உண்ண ஓங்கிய ஆழியால் ஊறு நேருமோ என அஞ்சி வாழ்த்தினார் எனலுமாம். இரும் பெரும் சுடர்ப் பிழம்பு - மிகப் பெரிய ஒளிப் பிழம்பு 'இரும்பெரும்' என்பது மீமிசைச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bless the world! Because a vast, great mass of blazing light
  2. appeared, encircling the world and reaching up to the sky,
  3. that sea, on that day, looked like the ocean
  4. that rises at the end of an age to swallow all the worlds.

What the poem says

A huge wall of flame now rings the world and reaches the sky, so that on that day the sea resembles the ocean of the cosmic deluge, which rises at the end of an age and swallows the whole world.

The opening 'vāḻiyar', 'may it live', can be a mere filler, or the poet's anxious blessing on the world, fearing it might really be swallowed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḻiyar ulakiṉai vaḷaittu vāṉ uṟac
cūḻ irum peruñ cuṭarp piḻampu tōṉṟalāl
ūḻiyiṉ ulaku elām uṇṇa ōṅkiya
āḻiyiṉ polintatu av āḻi aṉṉa nāḷ.