கம்பராமாயணம் 669 · பால 10.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(சினந்த விசுவாமித்திரன்); பேணலாது - (என் வார்த்தையை) மதிக்காமல், இகழ்ந்த - (என்னையும் திரிசங்குவையும்) அவமதித்த; விண்ணோர் - தேவர்களது; பெரும் பதம் முதலா - பெரிய பதவி முதலாக; மற்றைச் சேண்முழுது - மற்றை விண்ணுலக முழுவதையும்; அமைப்பல் என்னா - வேறு படைப்பேன் என்று சொல்லி; செழுங் கதிர் - (என்னால் படைக்கப்பட்டு என் கட்டளைக்கு உட்படும்) செழுங்கதிர்களையுடைய கதிரவனும், திங்கள் - சந்திரனும்; கோள் - மற்றைய கிரகங்களும்; நாள் - நட்சத்திரங்களும்; மாண் ஒளி கெடாது - மாட்சிமை மிக்க தத்தம் ஒளி குன்றாமலும்; தெற்கு வடக்கவாய் - தென்திசை உதயமும் வடதிசை மறைவும்; ஆய் வருக - உடையனவாகவும் சஞ்சரித்து வருக; என்று - எனக் கட்டளையும் இட்டு; தாணுவோடு - நிலை இயல் பொருள்களுடனே; ஊர்வ - இயங்கு இயல் பொருள்களும்; எல்லாம் - ஆகிய எல்லாவற்றையும்; சமைக்குவென் - (இப்பொழுதே) படைத்திடுவேன்; என்னும் வேலை - என்று தொடங்கும் பொழுது.
தாணு: நிலை இயல் பொருள். கோள்கள்: அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது (சூரியன், சந்திரன்). நாள் - அசுவினி முதலிய ஒளிகள்: ஆகுபெயர். மாண் ஒளி கெடாது - இடம், காலங்களின் வேற்றுமைகளால் நேரக்கூடிய ஒளிக்குறைவின்றி என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Beginning with the high station of the gods who scorned me without regard,
- I will make anew the whole of the heavens,' he said; 'Let the sun of rich rays, the planets, the stars and the moon
- move from south to north without loss of their great light,'
- and as he was about to create all things, the fixed with the moving —
What the poem says
In his rage at the gods' contempt, Kaucikaṉ begins to create a rival universe: a new heaven with its own Indra, and a new sun, moon, planets and stars that will keep their full brightness but rise in the south and set in the north. He is on the point of fashioning every kind of being, fixed and moving. The sentence continues into the next verse, where the gods intervene.