கம்பராமாயணம் 670 · பால 10.118

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நறை தரு உடைய கோனும், நால் முகம் கடவுள் தானும்,
கறை தரு களனும், மற்றைக் கடவுளர் பிறரும் தொக்குப்,
'பொறுத்து அருள் முனிவ! நின்னைப் புகல் புகுந்தவனைப் போற்றும்
அறம் திறன் நன்று, தாரா கணம் அத்து ஒடும் அமைக அன்னான்.

பொருள் · Meaning in Tamil

நறைத் தரு உடைய - மணமுள்ள கற்பகத் தருவையுடைய, கோனும் - இந்திரனும்; நான்முகக் கடவுள்தானும் - நான் முகனான பிரமனும்; கறைதரு களனும் - நஞ்சுக் கண்டமுடைய உருத்திர மூர்த்தியும்; மற்றைக் கடவுளர் பிறரும் - மற்றத் தேவர்களும், முனிவர்களும்; தொக்கு - ஒருங்கு கூடி; முனிவ - (கௌசிகனை நோக்கி) முனிவனே; பொறுத்தருள் - (தேவர்கள் உன்னை இகழ்ந்ததை) பொறுத்தருள்க; நின்னைப் புகல் புகுந்தவனை - உன்னைச் சரணம் அடைந்தவனை; போற்றும் - கைவிடாது காக்கும்; அறத்திறன் - தருமநெறி; நன்று - மிக நன்று; அன்னான் - அந்தத் திரிசங்கு அரசன்; தாரா கணத்தொடும் - நட்சத்திரக் கூட்டத்தோடும்; அமைக - பொருந்தி இருப்பானாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lord who owns the fragrant tree, the four-faced god,
  2. he of the stained throat, and the other gods besides, gathered and said,
  3. 'Forgive us, sage! Your righteous way of protecting him who sought refuge in you
  4. is good; let that king be set among the hosts of stars.'

What the poem says

Alarmed at Kaucikaṉ's new creation, Indra (lord of the wish-granting tree), Brahmā and Śiva (whose throat is stained by the poison he swallowed) come together with the other gods. They ask the sage to forgive their insult, praise his loyalty to the man who took refuge with him, and agree that Tiricaṅku may remain in the sky among the stars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṟait taru uṭaiya kōṉum, nāṉmukak kaṭavuḷtāṉum,
kaṟai taru kaḷaṉum, maṟṟaik kaṭavuḷar piṟarum tokkup,
'poṟuttaruḷ muṉiva! niṉṉaip pukal pukuntavaṉaip pōṟṟum
aṟat tiṟaṉ naṉṟu, tārā kaṇattoṭum amaika aṉṉāṉ.