கம்பராமாயணம் 671 · பால 10.119

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அரச மாதவன் நீ ஆதி: ஐந்து நாள் தென்பால் வந்து உன்
புரை விளக்கிடுக' என்னாக், கடவுளர் போய பின்னர்,
நிரைதவன் விரைவின் ஏகி, நெடும் கடற்கு இறைவன் வைகும்
உர இடம் அதனை நண்ணி உறு தவம் உஞற்றும் காலை.

பொருள் · Meaning in Tamil

அரச மாதவன் - சிறந்த அரசமுனி; நீ ஆதி - நீ ஆவாய்; ஐந்து நாள் தென்பால் - (வடக்கேயுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களுள்) ஐந்து நட்சத்திரங்கள் தெற்குத் திசை; வந்து உன்புரை - வந்திருந்து உன் மேன்மையை; விளக்கிடுக - தெரிவிக்கக் கடவன; என்னா - என்று சொல்லி (கௌசிகனைச் சமாதானப்படுத்திவிட்டு); கடவுளர் போய பின்னர் - தேவர்கள் புறப்பட்டுப் போன பின்பு; நிரை தவன் - நேர்மையான அத்தவ முனிவன்; விரைவின் ஏகி - வேகமாகச் சென்று; நெடுங்கடற்கு இறைவன் - பெரிய கடலுக்குத் தலைவனான வருணன்; வைகும் - (திக்குப் பாலகனாக) தங்கப்பெற்று; உரவு இடம் அதனை - வலிய இடமான மேற்குத் திசையை; நண்ணி - அடைந்து; உறுதவம் - மிக்க தவத்தை; உஞற்றும் காலை - செய்து வருங் காலத்து.

ஐந்து நட்சத்திரங்கள்: அனுடம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம். படைப்புக் காலம் தொடங்கி வடதிசையில் இருந்த இவை விசுவாமித்திரனுக்காக தென் திசைக்கு வந்தன என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You shall be a royal sage of great penance; let five stars come to the south
  2. and make your greatness shine,' they said; after the gods had gone,
  3. the sage of ordered penance went swiftly and reached the mighty quarter
  4. where the lord of the vast ocean dwells, and while he was performing intense austerity there —

What the poem says

The gods confer on Kaucikaṉ the title of rājarṣi, a royal sage, and, as a sign of his glory, five stars move into the southern sky. The commentary names them as the lunar mansions Anuṣā, Jyeṣṭhā, Mūla, Pūrvāṣāḍhā and Uttarāṣāḍhā, which tradition says were once northern.

Kaucikaṉ then goes to the west, the quarter of Varuṇa, lord of the ocean, to continue his penance. The sentence runs on into the next episode.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'araca mā tavaṉ nī āti: aintu nāḷ teṉpāl vantu uṉ
purai viḷakkiṭuka' eṉṉāk, kaṭavuḷar pōya piṉṉar,
nirai tavaṉ viraiviṉ ēki, neṭuṅ kaṭaṟku iṟaivaṉ vaikum
uravu iṭam ataṉai naṇṇi uṟu tavam uñaṟṟum kālai.