கம்பராமாயணம் 672 · பால 10.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குதை - குதையுள்ளதும்; வரி சிலை - கட்டமைந்ததுமான விற்களையும்; வாள் - வாள்களையும் உடைய; தானை - சேனையோடு கூடிய; கோமகன் - இராச குமாரனும்; சுதை தரு மொழியன் - அமுதம் போன்ற இன்சொற்களை உடையவனும்; வையத்து உயிர் ஆய - உலகத்தின் உயிர்களுக்கெல்லாம் உயிர்போல்; தோன்றல் - அன்பில் சிறந்தவனுமாகிய; அம்பரீடன் - அம்பரீடன் என்பவன்; வதை புரி - மனிதன் ஒருவனைக் கொன்று; புருட மேதம் வகுப்ப - ஓமம் செய்தவனாகிய புருடமேதம் செய்வதற்காக; ஓர் மைந்தன் கொள்வான் - இளைஞன் ஒருவனைப் பொருள் கொடுத்து வாங்கும் பொருட்டு; சிதைவு இலன் - முயற்சியில் குறைவு அற்றவனாய்; கனகம் தேர் கொண்டு - பொற் காசுகளைத் தேரின்மேல் (நிறைய வைத்துக்) கொண்டு; அடவிகள் தோறும் - காடுகள் தோறும்; துருவிச் சென்றான் - தேடிச் செல்பவனானான்.
புருட மேத ஓமம்: யாகம் செய்பவன் அதற்குரிய பசு காணாமற் போய் விடுமாயின், அதற்கு ஈடாக மனிதன் ஒருவனைக் கொன்று, ஓமம் செய்து யாகத்தை நிறைவேற்றுவது நூல் துணிபு. வையகத்து உயிர்க்கெல்லாம் உயிராய மன்னவனாய் இருப்பினும் வைதிகச் செயலில் ஊற்றம் உடையவனாதலால் அதனை முடிக்கும்பொருட்டு ஆளைத் தேட முற்பட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Amparīṭaṉ, a prince whose army bore notched, banded bows and swords,
- whose speech gave nectar, a noble one who was the life of every life on earth,
- to obtain a youth for the slaying in the human sacrifice he was to perform,
- unflagging, took gold on his chariot and went searching through the forests.
What the poem says
A new episode begins. Amparīṭaṉ (Ambarīṣa), a king of Ayōtti, gentle of speech and beloved of all his people, has lost the animal for his sacrifice. According to the ritual texts, it may then be completed by offering a human victim. Devoted to Vedic rites, he loads his chariot with gold and searches the forests for a young man he can buy for the purpose.