கம்பராமாயணம் 6691 · யுத்த 6.59

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இடுக்கு இனி எண்ணுவது என்னை? ஈண்டு இனி
முடுக்குவென் வருணனை'என்ன மூண்டு எதிர்
தடுக்க அரும் வெகுளியன் சதுமுகன் படை
தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார்.

பொருள் · Meaning in Tamil

இடுக்கு இனி எண்ணுவ தென்னை - இதனால் இனி வரப் போகும் துன்பங்களைப் பற்றி நினைப்பதால் என்ன பயன்?; ஈண்டு இனி முடுக்குவென் வருணனை என்ன - வருணனை இனி இங்கு விரைவில் வருமாறு செய்வேன் என்று; மூண்டு எதிர் தடுக்கரும் வெகுளியான் - பெருகி எழுகின்ற எதிர்த்து எவரும் தடுக்க இயலாத வெகுளியை உடைய இராமன்; சதுமுகன் படை தொடுத்தனன் - பிரமதேவனது கணையான (பிரம்மாஸ்திரத்தை வில்லில் தொடுத்து விடத் தொடங்கினான்; அமரரும் துணுக்கம் எய்தினார் - அதைக்கண்டு தேவர்களும் திடுக்கிட்டார்கள்.

இடுக்கு - துன்பம். முடுக்குதல் - விரைதல் மூண்டு - மேல் மேல் பெருகி தடுக்க அரும் வெகுளி - தடுப்பதற்கரிய கோபம். சதுமுகன்படை ஆற்றல் மிக்கது என்பதால் அதனால் நேரும் துன்பத்தை நினைத்துப் பயனென்ன? வருணன் விரைந்து வரவேண்டுமானால் சதுமுகன் படையை எய்வதே தக்கது என்பதால் 'இடுக்கினி எண்ணுவதென்னை' என்று இராமபிரான் கூறினான் எனலுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Why think any more of the harm it may do? Here and now
  2. I shall drive Varuṇaṉ to come,' he said, and with a fury that surged
  3. and that none could check, he set to his bow the weapon of the Four-Faced One;
  4. and even the immortals trembled.

What the poem says

Rāmaṉ's anger mounts past all restraint. He will no longer weigh the damage his weapons might cause: he will force Varuṇaṉ to come here at once. He fits to his bow the Piramāstiram, the weapon of the four-faced Piramaṉ, the most terrible of all, and even the gods are struck with dread.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṭukku iṉi eṇṇuvatu eṉṉai? īṇṭu iṉi
muṭukkuveṉ varuṇaṉai' eṉṉa mūṇṭu etir
taṭukka arum vekuḷiyāṉ catumukaṉ paṭai
toṭuttaṉaṉ; amararum tuṇukkam eytiṉār.