கம்பராமாயணம் 6692 · யுத்த 6.60

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மழைக் குலம் கதறின; வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன்; உலகமும் அடைத்த ஆறு எலாம்;
இழைத்தன நெடுந்திசை யாதும்; யார் இனிப்
பிழைப்பவர்? என்பது ஓர் பெரும் பயத்தினால்.

பொருள் · Meaning in Tamil

மழைக்குலம் கதறின - (இராமபிரான் சதுமுகன் கணையை ஏவ மேகக் கூட்டங்களெல்லாம் கதறலாயின; வருணன் வாய் உலர்ந்து அழைத்தனன் - வருணன் வாய் வறண்டு கதறினான்; உலகமும் ஆறெலாம் அடைத்த - உலகிலுள்ள ஆறுகளெல்லாம் தூர்ந்து போயின; யார் இனிப் பிழைப்பவர் - சதுமுகன் படைக்குத் தப்பி இனி யார் பிழைப்பார்கள்; என்பதோர் பெரும்பயத்தினால் - என்பதொரு பெரிய பயத்தால் இவ்வளவு நடந்தது; நெடுந்திசை இழைத்த - நீண்ட திசைகளெல்லாம் நுணுகிப் பொடியாயின;

'பிழைப்பிலர்' என்பதைவிட 'பிழைப்பவர் என்று பாடமே ஏற்றது மழைக்குலம் - மேகக் கூட்டம் உலர்ந்து - வறண்டு ஆறெலாம் - ஆறுகளெல்லாம் அடைத்த - தூர்ந்தன நெடுந்திசை - நீண்ட திசைகள் இழைத்த - தேய்ந்து நொறுங்கின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The tribes of clouds cried out; Varuṇaṉ, his mouth parched,
  2. called out; all the rivers of the world were choked;
  3. every one of the far directions wore thin, out of a great fear:
  4. 'Who now can escape?'

What the poem says

At the sight of Piramaṉ's weapon, the whole of nature is seized with terror. The clouds wail, Varuṇaṉ cries out with a dry mouth, the rivers of the world silt up and stop, and the vast directions themselves seem to wear away, all from the one fear that no one will survive. The commentary prefers a variant reading of the last phrase, 'who will survive', to the printed 'none will survive'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maḻaik kulam kataṟiṉa; varuṇaṉ vāy ularntu
aḻaittaṉaṉ; ulakamum aṭaitta āṟu elām;
iḻaittaṉa neṭun ticai yātum; yār iṉip
piḻaippilar eṉpatu ōr perum payattiṉāl.