கம்பராமாயணம் 6694 · யுத்த 6.62

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீளக்
கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்து இவன் சீற்றம் கண்டும்
வரக் கருதாது தாழ்த்த வருணனின் மாறு கொண்ட
அரக்கரே நல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார்.

பொருள் · Meaning in Tamil

இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து - (தனது திருவுள்ளத்திலே உயிர்களிடம்) இரக்கம் தோன்றிய காலத்திலே; உலகெலாம் ஈன்று மீளக் கரக்கும் நாயகனை - உலகங்கள் அனைத்தையும் படைத்து மறுபடியும் மறைத்துக் கொள்ளவல்ல உலக நாயகனை; தானும் உணர்ந்திலன் - நாம் அறிந்திருத்தல் போலத்தானும் அறியாதவனாயினான்; சீற்றம் கண்டும் வரக்கருதாது - இராமபிரானுடைய கோபத்தைப் பார்த்தபின்பும் வருவதற்கு நினைக்காமல்; தாழ்த்த வருணனின் - காலம் தாழ்த்த இந்த வருணனைவிடவும்; மாறு கொண்டார் அரக்கரே அல்லர் என்னா - இராமபிரானிடம் பகை கொண்ட அவர்கள் அரக்கர் அல்லர் (இந்த வருணன்தான் அரக்கன்) என்று கூறி; அறிஞரும் அலக்கண் உற்றார் - மற்றத்தேவர்கள் எல்லோரும் துன்பமுற்றார்கள்.

இறைவன் கருணையே உருவானவன் தனது கருணையால் உயிர்களைப் படைத்தும், கரந்தும், பின்பு மறைப்பதும் செய்யவல்லவன் திருமால். திருமாலின் அவதாரமான இராமபிரானை 'கரக்கும் நாயகன்' என்றார். 'தானும்' உம்மை எச்சவும்மை. அலக்கண் - துன்பம் 'மாறு கொண்ட அரக்கரே நல்லர் என்பதும் ஒரு பாடம் வருணனைவிடப் 'பகை கொண்ட அரக்கர்களே நல்லவர்கள் என்பது அதன் பொருளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He too failed to know the Lord who, when compassion arises in him,
  2. brings forth all the worlds and takes them back again into himself;
  3. compared with Varuṇaṉ, who saw his wrath and still delayed, with no thought of coming,
  4. are those who made themselves his foes the real demons? No!' So the wise ones grieved.

What the poem says

The wise ones among the gods are distressed and blame Varuṇaṉ. Like others, he has failed to recognise Rāmaṉ as the Lord who in his compassion creates all the worlds and draws them back into himself. Even after seeing his anger, Varuṇaṉ still has not come. Compared with him, they say, Irāvaṇaṉ's demons are not the true demons at all. A variant reading gives the same sense: 'the demons who fight him are better than Varuṇaṉ'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irakkam vantu etirnta kālattu ulaku elām īṉṟu mīḷak
karakkum nāyakaṉait tāṉum uṇarntilaṉ; cīṟṟam kaṇṭum
varak karutātu tāḻtta varuṇaṉiṉ māṟu koṇṭār
arakkarē? allar eṉṉā aṟiñarum alakkaṇ uṟṟār.