கம்பராமாயணம் 6695 · யுத்த 6.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உற்று ஒரு தனியே தானே - தான் ஒருவனே தனியாகப் பொருந்தியிருந்து; தன்கணே உலகம் எல்லாம் பெற்றவன் - தன்னிடமிருந்தே உலகங்கள் எல்லாவற்றையும் ஈன்றவன்; முனியப்புக்கான் - வெகுளத் தொடங்கினான்; நடு இனிப் பிழைப்பது எங்ஙன்? - இந்தக் கோபத்துக் கிடையே நாம் தப்பிப் பிழைப்பது எவ்வாறு; குற்றம் ஒன்று இலாதோர் மேலும் - குற்றம் எதுவும் செய்யாத நம்மீதும்; கோள் வரக் குறுகும் என்னா - தீங்கு வரக் கூடும் என்று கருதி; மற்றைய பூதம் எல்லாம் வருணனைவைத - மற்றைப் பூதங்கள் யாவும் வருணனைத் திட்டின.
'பரமன் தனது சங்கல்பத்தால் தான் ஒருவனே தன்னிடமிருந்து உலகங்களைப் படைக்கிறான்' என்பது சமய நூற் கொள்கை. ஐம் பெரும் பூதங்களில் ஒன்று நீர் அதற்குரியவன் வருணன். அவன் செய்த தவறு காரணமாக மற்றைப் பூதங்களுக்கும் தீங்கு நேரக் கூடும் என, அவை வருணனை வைதன. கோள் - தீங்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He who, alone and by himself, brought forth all the worlds
- out of himself, has begun to be angry; how can we survive in the midst of this?
- Harm will come close even to those who have done no wrong.'
- So saying, all the other elements cursed Varuṇaṉ.
What the poem says
The other four elements, earth, fire, wind and space, are afraid. Water is Varuṇaṉ's element, and he is the one at fault, but the anger of the Lord who alone created all the worlds from within himself may destroy the innocent along with the guilty. So they all curse Varuṇaṉ for bringing this on them.