கம்பராமாயணம் 6696 · யுத்த 6.64

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எழுசுடர்ப் படலையோடும் இரும்புகை நிரம்பி எங்கும்
வழி தெரிவு அறிகிலாத நோக்கினன் வருணன் என்பான்,
அழுது அழி கண்ணன், அன்பால் உருகிய நெஞ்சன், அஞ்சித்
தொழுது எழு கையன், நொய்தின் தோன்றினன், வழுத்தும் சொல்லான்.

பொருள் · Meaning in Tamil

எழு சுடர்ப் படலையோடும் - தொடர்ந்து எழுகின்ற தீச்சுடர்களின் திரள்களோடு; இரும்புகை நிரம்பி - நிறைந்த புகை நிரம்பி; எங்கும் வழி தெரிவு அறிவிலாத - எங்கும் வரும் வழியைத் தெரிந்து கொள்ள அறியாத; நோக்கினன் வருணன் என்பான் - நோக்கினை உடையவனான வருணன் என்பவன்; அழுது அழிகண்ணன் - அழுது அழுது அழகிழந்த கண்களை உடையவனாகவும், அன்பால் உருகிய நெஞ்சன் - இராமபிரானிடம் கொண்ட அன்பினால் உருகிய உள்ளத்தை உடையவனாகவும், அஞ்சித் தொழுது எழு கையன் - அஞ்சி, தொழுதபடி மேலே உயர்த்தியகைகளை உடையவனாகவும்; வழுத்தும் சொல்லான் - இராமபிரானைப் போற்றிப் புகழும் சொற்களை உடையவனாகவும்; நொய்தின் தோன்றினன் - விரைந்து (இராமபிரானுக்கு எதிரிலே வந்து) தோன்றினான்.

எழுசுடர் - மேலும் மேலும் எழுகின்ற தீச்சுடர் படலை - திரள். எங்கும் புகை நிறைந்திருத்தலால் கண்களால் பார்க்க இயலவில்லை நொய்தல் - விரைதல். வருணன், நோக்கினன் கண்ணன், நெஞ்சன், கையன் சொல்லன் தோன்றினன் என இயையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the dense smoke filling everything along with the masses of rising flame,
  2. he whose sight could not make out the way anywhere, the one called Varuṇaṉ,
  3. with eyes ruined by weeping, his heart melting with love, in fear,
  4. his hands raised in worship, quickly appeared, with words of praise.

What the poem says

At last Varuṇaṉ comes. Blinded by smoke and flame so that he can hardly see his way, eyes swollen with weeping, heart melting with love for Rāmaṉ, he appears quickly before him, hands raised in worship and words of praise on his lips.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻu cuṭarp paṭalaiyōṭum irum pukai nirampi eṅkum
vaḻi terivu aṟivu ilāta nōkkiṉaṉ varuṇaṉ eṉpāṉ,
aḻutu aḻi kaṇṇaṉ, aṉpāl urukiya neñcaṉ, añcit
toḻutu eḻu kaiyaṉ, noytiṉ tōṉṟiṉaṉ, vaḻuttum collāṉ.