கம்பராமாயணம் 6697 · யுத்த 6.65

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீ எனை நினைந்த தன்மை - பெருமானே! நீ என்னை வருமாறு நினைத்த தன்மையை; நெடுங்கடல் முடிவில் நின்றேன் ஆயினேன் - இந்தப் பெரிய கடலில் முடிவான இடத்திலே நின்றவனாகிய நான்; அறிந்திலேன் என்று - அறியாதவனானேன் என்று கூறிக் கொண்டு; அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க - இராமபிரானுக்கு ஐயம் தீரும்படி; காய் எரிப்படலை சூழ்ந்த - எரியும் தீத்திரள் எங்கும் சூழ்ந்திருந்த; கருங்கடல் தரங்கத்து ஊடே - கரிய கடல் அலைகளுக்கு இடையிலே; தீயிடை நடப்பான் போல - நெருப்புக்கு இடையிலே நடந்து வருபவனைப் போல்; செறி புனற்கு இறைவன் சென்றான் - செறிந்த கடலுக்கு அரசனான வருணன் வரலானான்.

எரிப்படலை - நெருப்புத்திரள். புனற்கு இறைவன், அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க, நினைத்த தன்மை அறிந்திலேன் என்று சென்றான் என இயையும். எரியும் நெருப்புத் திரள் சூழ்ந்த அலைகளுக் கடையே நடந்து வருபவன் 'தீயிடை நடப்பான் போலச் சென்றான்' என்றார் "தீப் பொதிந்தாமென மிதிக்கும் செய்கையன்" என இராவணனைக் கூறுதல் (3340) ஒப்பிடத்தக்கது. 'நாம் நினைத்தும் வராததேன்' என்று இராமன் கருதிய ஐயத்தைப் போக்க 'நீ என்னை நினைத்ததை நான் நீண்ட இக் கடலின் முடிவில் நின்றதால் அறியாதவனானேன்' என்று கூறியபடி வருணன் வந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That you were thinking of me, I did not know, for I was
  2. at the far end of the long sea': so, to clear the Lord's doubt,
  3. through the waves of the dark sea ringed with masses of scorching fire,
  4. like a man walking through flames, the lord of the teeming waters came.

What the poem says

Varuṇaṉ comes forward saying that he had been far away at the other end of the ocean and did not know that Rāmaṉ had been invoking him, to clear Rāmaṉ's suspicion that he had been slighted. He has to pick his way through the burning waves like a man walking on fire. The commentary compares an earlier image of Irāvaṇaṉ treading as if on fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nī eṉai niṉainta taṉmai, neṭuṅ kaṭal muṭivil niṉṟēṉ
āyiṉēṉ aṟintilēṉ' eṉṟu aṇṇalukku ayirppu nīṅka,
kāy erip paṭalai cūḻnta karuṅ kaṭal taraṅkattūṭē,
tīyiṭai naṭappāṉ pōla, ceṟi puṉaṟku iṟaivaṉ ceṉṟāṉ.