கம்பராமாயணம் 6698 · யுத்த 6.66

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறி கடற்கு இறைவன் - அலைகள் மடிந்து விழும் கடலுக்கு அரசனான வருணன்; வாயில் சிந்திய மொழியன் - வாயிலிருந்து சிந்தும் சொற்களை உடையவனாயும்; தீந்த சென்னியன் - தீயினால் தீய்ந்து போன தலையை உடையவனாயும்; திகைத்த நெஞ்சன் - திகைப்புண்ட மனத்தை உடையவனாகவும்; வெந்து அழிந்து உருகும் மெய்யன் - தீயால் வெந்து, உருவழிந்து, உருகுகின்ற உடலை உடையவனாகவும்; விழுப்புகைப் படலம் விம்ம - மிகுந்த புகைக் கூட்டம் எங்கும் நிறைந்து இருப்பதால்; அந்தரின் அலமந்து - கண் பார்வை இல்லாதவனைப் போலத் தடு மாறிக் கொண்டு; அஞ்சித்துயர் உழந்து - பயந்து கொண்டு துன்பத்தால் வருந்துபவனாய்; அலக்கண் உற்றான் வந்தனன் - வேதனைப்பட்டு வந்தான்.

என்ப, மன்னோ - அசைச் சொற்கள். விழுப்புகை - மிகுந்த புகை படலம் - திரள் அந்தர் - குருடர் மறிகடற்கு இறைவன் - மொழியன் சென்னியன் - நெஞ்சன் அந்தரின் அலமந்து, வந்தனன் என்று இயையும். அலக்கண் - துன்பம். வருணன் கண்ணிருந்தும் காண இயலாதபடி புகை நிறைந்து சூழ்ந்திருந்தமையால் குருடர் போலத் துன்புற்றதை அலக்கண் உற்றான் என்று குறித்தார் முன்பும் வழி தெரிவு அறிவிலாத நோக்கினன் என்றார். அச்சத்தால் தன்னையறியாது சிதைந்து வந்த மொழியாதலின் சிந்திய மொழியன் என்றார் அச்ச மெய்ப்பாட்டுக்கு இப்பாடல் நல்ல எடுத்துக்காட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So they say the lord of the rolling sea came: with words spilling
  2. from his mouth, his head scorched, his heart bewildered,
  3. his body burned, ruined and melting; as the thick pall of smoke swelled,
  4. he stumbled like the blind, afraid, labouring in sorrow, in torment.

What the poem says

A picture of Varuṇaṉ's state as he arrives: his words tumble out broken, his head is singed, his mind is dazed, his body scorched and melting. Blinded by the smoke, he gropes his way like a blind man, terrified and in agony. The commentary singles out this verse as a fine example of the poetic portrayal of fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantaṉaṉ eṉpa maṉṉō maṟi kaṭaṟku iṟaivaṉ; vāyil
cintiya moḻiyaṉ, tīnta ceṉṉiyaṉ, tikaitta neñcaṉ,
ventu aḻintu urukum meyyaṉ, viḻup pukaip paṭalam vimma,
antariṉ alamantu, añci, tuyar uḻantu, alakkaṇ uṟṟāṉ.