கம்பராமாயணம் 6699 · யுத்த 6.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக - குற்ற மற்ற இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பெருமானே; நீயே சீறின் - (கருணைமிகுந்த மனத்தை உடைய) நீயே இவ்வாறு என் மீது சினம் கொண்டாயானால், கவயம் நின் சரணமல்லால் - (எனக்குப் பாதுகாப்பான) கவசம் உனது பாதங்களே அல்லாமல்; பிறிது ஒன்று கண்டதுண்டோ - வேறு ஒன்றினை நான் பார்த்ததுண்டோ?; இவை உனக்கு அரியவோதான் - கடலுக்குத் தீயிட்டு, உலகை நடுங்கச் செய்யும் இச் செயல் உனக்கு அரியதொன்றே!; எனக்கு என வலி வேறுண்டோ - உனது வலிமையாய் வாழ்கின்ற எனக்கு எனத்தனியான வலிமை வேறுளதோ?; அவயம் நின் அவயம் என்னா - அடைக்கலம் உனக்கு அடைக்கலம் என்று; அடுத்து அடுத்து அரற்றுகின்றான் - அடுத்தடுத்துக் கூறி அரற்றுவானானான்.
நவை - குற்றம், கவயம், அவயம் என்பன கவசம், அபயம் என்பதன் திரிவுகள் 'தலைவனே சீறுவானாயின் அடிமைக்கு வேறு பாதுகாவல் ஏது' என்பான் 'நீயே சீறின் கவயம் பிறி தொன்றுண்டோ' என்றான். 'அபயம், அபயம்' என்று பலமுறை கூறி அரற்றினான் என்பதை 'அடுத்தடுத்து' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'O Lord of all the flawless worlds! If you yourself are angry,
- what other armour have I ever seen but your feet?
- Are these things hard for you? Have I any strength of my own?
- Refuge! I seek refuge in you!' So he cried out again and again.
What the poem says
Varuṇaṉ pleads with Rāmaṉ, Lord of all the worlds. If the Lord himself is angry, his servant has no protection except the Lord's own feet. Burning the sea is easy for Rāmaṉ, and Varuṇaṉ has no strength of his own apart from him. He cries out over and over, 'avayam', refuge, the Tamil form of the Sanskrit abhayam.